சினிமா செய்திகள்
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
Ads
 ·   ·  1653 news
  •  ·  0 friends
  • 1 followers

இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைய இந்தியாவுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னேறுவதே நோக்கம் - ஜனாதிபதி ரணில்

 

இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற 31 ஆவது அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் 2024 (AIPM 2024) இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் - கடினமான கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் இந்தியா வழங்கிய 3.5 பில்லியன் டொலர் கடன் உதவி, எமக்கு பலமாக அமைந்தது. அந்தப் பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும், பங்களாதேஷ் எங்களுக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை நாங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்களின் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு, அடுத்த வாரம் கூடவுள்ளது.

எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஆகிய தரப்பினரை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், சீனா மற்றும் சீனா எக்சிம் வங்கியுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். அதன் பிறகு, எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும், சீனாவின் எக்சிம் வங்கியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளோம்.

அதன்படி, வரும் புதன் கிழமை உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவை (OCC) சந்திப்போம். அடுத்த வாரம் அல்லது அதற்குள், ஒரு நாடாக நாம் வங்குரோத்துநி லையிலிருந்து விடுபட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால் இத்துடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது. நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார சரிவைத் தவிர்க்க வேண்டுமாயின், புதிய பொருளாதார பொறிமுறைக்கு நாம் துரிதமாக மாற வேண்டும். அது ஒரு போட்டிமிக்க, டிஜிட்டல் ஏற்றுமதி சார்ந்த பசுமைப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். அது நமக்குள்ள இரண்டாவது பொறுப்பு. எனவே, இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை சட்டப்பூர்வமாக்க புதிய அணுகுமுறைக்குச் செல்ல முடிவு செய்தோம்.

மேலும், வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி வருமானம் மற்றும் பல பரிமாண வறுமையைக் குறைப்பதற்கான அளவுகோல்கள் அமைக்கப்பட வேண்டும். இப்பிராந்தியத்தில் அவ்வாறு செய்யும் முதல் நாடு இலங்கை என்று நான் நம்புகிறேன்.

இதேநேரம் எதிர்கால அபிவிருத்தி இலக்கை அடைய, இலங்கை இந்தியாவுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்க்கிறது. அதன்போது பல விசேட அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதில் முதலாவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின்சார விநியோக வலையமைப்புகளை ஒன்றோடொன்று இணைப்பதாகும். அப்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நிலைபேறான வலுசக்தியைக் கடத்தும் திறன் உருவாகும். அதன் மூலம் புதிய வருமானத்தைப் பெற முடியும். மேலும், இந்த ஜூலை மாதம் சாம்பூரில் சூரிய சக்தி திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.]

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் பலாலி விமான நிலையம் மற்றும் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை, இந்தியாவின் அமுல் பால் நிறுவனத்துடன் இணைந்து, இந்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைமார்க்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் நாம் விரிவாகக் கலந்துரையாடினோம்.

திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தில் கைத்தொழில்களுக்கான முதலீட்டு வலயங்களும் உள்ளடங்கும். அதேபோன்று சுற்றுலாப் வலயத்தையும் கொண்டுள்ளது. மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான இறுதி கண்காணிப்பு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

மேலும், திருகோணமலையை எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக மாற்ற எதிர்பார்ப்பதுடன், துறைமுகங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை நிர்மாணிப்பதன் மூலம் திருகோணமலை துறைமுகம் வங்காள விரிகுடாவில் ஒரு பிரதான துறைமுகமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று, முழு கிழக்கு கடற்கரையும் சுற்றுலாத்துறைக்காக திறக்கப்பட்டுள்ளது. காலி மற்றும் தெற்கு பிரதேசங்களில் ஹோட்டல்களுக்கு மேலதிக காணிகள் வழங்கப்படுகின்றன. நாட்டில் புதிய முதலீட்டு வலயங்கள் திறக்கப்படும். எமது தொழிற் பயிற்சித் திட்டமும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே, இந்தத் திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 411
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads