சினிமா செய்திகள்
அரவிந்த் சாமியின் மகன் அடுத்த ஹீரோவாக ரெடி
இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் அரவிந்த் சாமி. இவரைப் போல மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரா என ஏங்காத பெண்களே இல்லை.ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன
மனைவி பற்றி ஜெயம் ரவி சொன்னது உண்மை என உறுதிப்படுத்திய நடிகர்
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அவரது மனைவி, இந்த முடி
“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம் - ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு என்கவுண்ட்டர் போலீஸ் வேடம்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ர
விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்
வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
Ads
 ·   ·  1454 news
  •  ·  0 friends
  • 1 followers

எரிபொருள் மோசடியினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு - நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியானது தகவல்

பெட்ரோலிய வளக்கூட்டுத்தாபனத்தின் அசமந்த போக்கினால், எரிபொருளுக்கு மக்கள் கூடுதல் தொகையை செலுத்த நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு பிறப்பிக்கப்பட வேண்டிய சுற்றுநிருபம் ஒன்று எட்டு ஆண்டுகளாக வெளியிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு சுற்றுநிருபம் வெளியிடுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக மக்கள் ஒரு லீட்டர் எரிபொருளுக்கு 7 ரூபா கூடுதலாக செலுத்த நேரிட்டுள்ளது.

குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தரகுப் பணத்தை கூடுதலாக செலுத்தியமையினால் இவ்வாறு மக்கள் மீது வரிச்சுமை திணிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியவளக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்தவர்கள் இழைத்த தவறினால் நாட்டு மக்கள் இவ்வாறு எரிபொருளுக்கு கூடுதல் விலை செலுத்த நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேநேரம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக எரிபொருளுக்காக கூடுதல் சுமையை சுமக்க வேண்டியுள்ளமை தொடர்பில் அதன் சந்தைப்படுத்தல் திணைக்கள அதிகாரிகளே பொறுப்பு என்று குழு குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இந்த மோசடி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கு குழு பரிந்துரைத்தது.

அதிகாரிகளின் இந்த மோசடியினால், ஒக்டேன் 92 பெட்ரோல் லிட்டருக்கு 5.85 ரூபாயும், 95 பெட்ரோல் லிட்டருக்கு 7.50 ரூபாயும், லெட் 5.88 ரூபாயும், எல்எஸ்டிக்கு 6.96 ரூபாயும் நுகர்வோர் செலுத்துவதாக மேலும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மோசடிக்கு காரணமான அதிகாரிகள் தற்போது நாட்டில் இல்லை என்றும், மோசடியில் ஈடுபட்ட நபர்களின் பெயர் பட்டியல் அடங்கிய விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு குழு பரிந்துரைத்துள்ளது

இதற்கமைய, உள்ளக விசாரணைகளுடன் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

  • 467
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads