WORLD NEWS

  •  ·  Standard
  • 1 members
  • 1212 views
Followers
Empty
Membership
Standard
Info
Who can post to my profile:
Error occurred
Organization Name:
WORLD NEWS
Category:
Friends count:
Followers count:
Administrators
Achievements

Basic

Total points: 76

4926 point(s) to reach
Comments (0)
Login or Join to comment.

உலக செய்திகள்....

Members
WORLD NEWS
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
·
Added a news
39 வயதான சுல்தான் கோசென், தென்கிழக்கு துருக்கிய நகரமான மார்டினில் பிறந்தார். இவர் உலகின் மிக உயரமான மனிதருக்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.மனிதர்கள் அனைவரது வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது மூளையின் தண்டுவடத்தின் கீழ் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகும். அது அனைவருக்கும் சராசரியான செயல்பாடுகளை மேற்கொள்ளும். ஆனால் சுல்தான் கோசென்னுக்கு பிட்யூட்டரி சுரப்பியின் அசாதாரணமான செயல்பாடு காரணமாக அவர் அசுர வளர்ச்சி பெற்றார். அவர் 8 அடி 3 அங்குலம்  (251 செ.மீ.) உயரத்துடன் காணப்படுகிறார்.இவர்  2013-ல் சிரியப் பெண்ணான மெர்வ் டிபோவை மணந்தார். ஆனால் அவர் அரபு மொழி மட்டும் பேசியதால் இருவருக்கும் இடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த ஜோடி சமீபத்தில் விவாகரத்து பெற்றது.சுல்தான் கோசென் தனது புதிய துணையை தேடி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு பயணம் செய்துள்ளார். இது குறித்து அவர் ரஷ்ய தொலைக்காட்சி பேட்டியில் கூறும்போது, நான் புதிய காதலியை  தேடி இங்கு வந்துள்ளேன். ரஷிய பெண்கள் மிகவும் அன்பானவர்களாகவும், மிகவும் அழகானவர்களாகவும் இருப்பதை அறிந்தேன். எனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு மீண்டும் துருக்கிக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ரஷிய பெண் எனக்கு ஒரு மகனையும், மகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதனையே நான் விரும்புகிறேன் என சுல்தான் கோசென் கூறினார்.
  • 1386
·
Added a news
ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு ஐரோப்பியா, இந்தியா, ரஷியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நன்கொடையாக வழங்கி வருகின்றன.வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் தடுப்பூசிகளை ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. குறிப்பாக, நைஜீரியாவுக்கு கொரோனா தடுப்பூசி உலக சுகாதார அமைப்பு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி வழங்கப்பட்டும் போதும் போதிய மருத்துவ கட்டமைப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், வளர்ந்த, வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சம் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரிய அரசு அழித்துள்ளது. காலாவதியானதால் 10 லட்சத்து 66 ஆயிரத்து 214 கோரோனா தடுப்பூசி டோஸ்களை மண்ணில் புதைத்து அழித்துள்ளதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது. பிற நாடுகள் நன்கொடையாக வழங்கிய 10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஓரிரு வாரத்தில் காலாவதியாகும் சூழ்நிலையில் இருந்துள்ளது. நைஜீரியாவில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாததாலும், தடுப்பூசி தொடர்பாக எதிர்மறை தகவல்கள் பரவியதால் தடுப்பூசி மீது மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
  • 1499