INDIA

Followers
Membership
Standard
Info
Who can post to my profile:
Array
Organization Name:
INDIA
Category:
Friends count:
Followers count:
Administrators
Achievements

Basic

Total points: 106

4896 point(s) to reach
Comments (0)

    இந்திய செய்திகள்....

    Joined Organizations
    INDIA
    Empty
    typing a message...
    Connecting
    Connection failed
    Added a news 
    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.இந்தியாவிலும் கடந்த 2-ந்தேதி நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று தற்போது 250-ஐ தாண்டியுள்ளது . டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால், ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேர ஊரடங்கு கொண்டுவரப்படுவதாக மாநிலத்தின் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை நீடிக்கிறது.இருப்பினும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் யாருக்கும் இதுவரை ஒமைக்ரான் வகை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
    • 824
    Added a news 
    உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ம்  தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் கால்பதித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு உறுதி செய்திருக்கிறது.இந்தியாவிலும் கடந்த 2-ம்  தேதி நுழைந்த இந்த வைரஸ் தற்போது 269 பேருக்கு பாதித்துள்ளது. டெல்டா வைரசை விட குறைந்தது 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச நிர்வாகங்களையும் உஷார்படுத்தி மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி சுகாதார நிபுணர்களுடன் தற்போது முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் 300-ஐ நெருங்கி வரும் நிலையில், வைரஸ் பரவலை தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாக சுகாதாரத்துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துதல், பூஸ்டர் டோஸ், ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா? பொது இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்தல் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • 770
    Added a news 
    இந்தியா முழுவதும் 236 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாகவும், உலகம் முழுவதும் 106 நாடுகளில் பரவி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். புதிதாக 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன.ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 34 பேரில் 30 பேர் வெளிநாடு, ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர். இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வரவேண்டி உள்ளது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65, டெல்லியில் 64 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 
    • 758
    Added a news 
    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 2,095 கோடி ரூபாய் மதிப்பிலான 27 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, பசு மாடு நமக்கு தாய் போன்றது மற்றும் புனிதமானது. பசு மாடுகள், எருமை மாடுகளை கேலி செய்பவர்கள் அந்த கால்நடைகளை நம்பி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் உள்ளது என்பதை மறந்துவிட்டனர். அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் அனைவரின் ஆதரவே எங்களுக்கு முக்கியம் என்றார்.403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக பல்வேறு நலத்திட்டபணிகளை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    • 770
    Added a news 
    தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் இந்தியாவில் மொத்தம் 200க்கும் அதிகமானவர்களுக்கு ஒமிக்ரான் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தஞ்சாவூரில் உள்ள ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருமணங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த அந்த நபரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • 723
    INDIA News