·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

மீந்து போன இட்லியில் சுவையான வடை

மீந்து போன சாதத்தை வைத்து பலவிதமான பலகாரங்களை செய்து கொடுப்பார்கள். மீந்து போன இட்லியை வைத்து எப்பொழுதும் போல் இட்லி உப்புமா, சில்லி இட்லி என்று செய்யாமல் மீதமான இட்லியை வைத்து சுட சுட வடை எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

இப்படி வடை செய்யும் பொழுது யாருமே மீந்துபோன இட்லியில் தான் செய்தோம் என்பதை கண்டுபிடிக்கவே மாட்டார்கள். முதலில் மீந்துபோன இட்லியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து நன்றாக உதிர்த்து விட வேண்டும். பிறகு இதில் பச்சரிசி மாவை சேர்க்க வேண்டும்.

பச்சரிசி மாவிற்கு தேவையான உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக சேர்க்கக் கூடாது. ஏனென்றால் இட்லி மாவில் நாம் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்போம். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி அதை சிறிது சிறிதாக கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து அதை பொடியாக நறுக்கி உதிர்த்துவிட்டு அதையும் அந்த மாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பச்சை மிளகாயை மிகவும் மெல்லியதாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அரை இன்ச் இஞ்சியை எடுத்து தோலை சீவி விட்டு பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையையும் அதில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிணைந்த பிறகு தேவைக்கேற்றார் போல் தண்ணீர் தெளித்து பிணைய வேண்டும். இந்த மாவானது சப்பாத்தி மாவை விட சற்று இலகுவாக இருக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் குறைந்த தீயில் வைத்துவிட்டு நாம் பிணைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து வடை தட்டுவது போல் தட்டி எண்ணெயில் போட வேண்டும். இப்படி வடை தட்டுவதற்கு முன்பாக கையில் எண்ணையை தடவிக் கொண்டு தட்டினால் மாவு கையில் ஒட்டாமல் வரும்.

எண்ணெயில் வடையை போட்ட உடனே திருப்பி விடாமல் அது ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு திருப்பி விட வேண்டும். இல்லையெனில் வடை உடைந்து விடும். இப்படி இரண்டு புறமும் நன்றாக சிவந்த பிறகு அதை எண்ணெயில் இருந்து எடுத்து தட்டில் வைத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான இட்லி வடை தயாராகி விட்டது. இந்த வடை விரைவிலேயே காலியாகும்.    

  • 1419
  • More
Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads