- · 5 friends
-
I

பருப்பு பொடி
கொஞ்சம் அடி கனமான சட்டியை அடுப்பில வச்சு நல்லா சுட வச்சுக்கோங்க. அதில துவரம் பருப்பையும், பாசிப்பருப்பையும் தனித்தனியா எண்ணெய் சேர்க்காம நல்லா சிவந்து வாசம் வரும் அளவுக்கு வறுத்து ஒரு தட்டுல கொட்டிகோங்க.
அடுத்ததா பொட்டுக்கடலையை அதே சட்டியில போட்டு, லேசா சூடு ஆகும்படி வறுத்து, அதையும் தட்டில் மாற்றிக்கோங்க. வரமிளகாய் உடையும் அளவிற்கு வறுபட வேண்டும். அடுத்ததாக ஜீரகம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து அதே தட்டில் கொட்டிக்கோங்க. கறிவேப்பிலை இரண்டு கொத்து மொருமொருன்னு உடையும் அளவுக்கு வறுத்து எடுத்துக்கோங்க.
10 பல் பூண்டை, நல்லா உரல்ல போட்டு இடிச்சிட்டு சட்டியில ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பூண்டை ப்ரவுன் கலர் வரும் அளவுக்கு வறுக்கணும். பூண்டில் ஈரப்பதம் இருந்தால், பருப்பு பொடி, சீக்கிரமாக கெட்டுப்போய்டும். அதனால ஈரம் இல்லாம வறுத்துடுங்க.
வறுத்த இந்த பூண்டையும், தட்டில் கொட்டி நல்லா ஆற வச்சுடுங்க. கடைசியா அடுப்பை அனைச்சுட்டு , உப்பை அந்த கடாயில் போட்டு, உப்போட ஈரப்பதம் போற அளவுக்கு அரை நிமிஷம் வறுத்துடுங்க.
அதையும் தட்டில் கொட்டிகோங்க.... இப்போ எல்லா பொருட்களையும் ஆறினத்துக்கு அப்புறம் , மிக்ஸி ஜார்ல போட்டு பொடியா அரைச்சுட்டா , சுவையான காரசாரமான பருப்பு பொடி தயார்.
காத்து புகாத டப்பாவில போட்டு வச்சிகிட்டா 3 மாசம் வரைக்கும் இதை வச்சி நீங்க பயன்படுத்திக்கலாம்...
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – 100 கிராம்
பாசிப்பருப்பு – 100 கிராம்
பொட்டுக்கடலை – 100 கிராம்
மிளகாய் – 10 லிருந்து 15 காரத்திற்கு ஏற்ப
சீரகம் – 2 ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
பூண்டு – 10 பல் தோல் உரித்தது
உப்பு தேவையான அளவு