·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

உடுப்பி தக்காளி தோசை

பெரிய பெரிய ஹோட்டல்களில் அதிகம் விலை கொடுத்து வாங்கக் கூடிய தோசை கூட, நம்ம வீட்டிலேயே ரொம்ப சுலபமாக தயாரித்து விடலாம். இட்லி மாவு இல்லை என்ற கவலை இனி தேவையில்லை. மாவில்லாத சமயத்தில் சட்டுனு தக்காளி தோசை மாவு எப்படி தயாரிப்பது என பார்ப்போம்.

இந்த தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி இரண்டு, வெங்காயம் இரண்டு, பூண்டு ஆறு பல், கோதுமை மாவு அரை கப், அரிசி மாவு அரை கப், ரவை கால் கப் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் உப்பு, தேவையான அளவு மல்லித்தழை – சிறிதளவு

தேவையான அளவிற்கு தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பொடியாக நறுக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த அரிசி மாவு எடுத்துக் கொண்டாலும் சரி, வறுக்காத ரவையாக இருந்தால் ரவையை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். மிக்ஸர் ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். 

பின் அதனுடன் வறுத்த ரவை, எடுத்து வைத்துள்ள அரிசி மாவு மற்றும் கோதுமை மாவு சேர்த்து ஆறு பல் பூண்டை தோலுரித்து போட்டுக் கொள்ளுங்கள். பின் காரத்திற்கு மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு தோசை மாவு பதம் வர கொஞ்சம் போல தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கரைத்தால் தோசை மாவு போல திக்காக வர வேண்டும். இப்போது நறுக்கிய மல்லித்தழை மேலே தூவி கொள்ளுங்கள்.  

தோசை கல் சூடேறியதும் மிதமான தீயில் வைத்து ஒன்றரை கரண்டி மாவை எடுத்து மெலிதாக நன்கு தோசை கல் முழுவதுமாக பரப்பிக் கொள்ளுங்கள். சுடச்சுட தோசை வெந்து வர நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திருப்பி போடுங்கள். இருபுறமும் நன்கு வெந்த பிறகு தட்டில் எடுத்து கார சட்னி அல்லது தேங்காய் சட்னி கெட்டியாக வைத்து பரிமாறினால் அட்டகாசமான தக்காளி தோசை சாப்பிட சாப்பிட வயிற்றுக்குள் இறங்கிக் கொண்டே இருக்கும். அடிக்கடி இட்லிக்கு மாவு அரைக்கணுமே என்று தலையை பிய்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  

  • 1711
  • More
Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads