Ads

தண்ணீர் இறைக்க பயன்படுத்தும் முறைகளை பாருங்கள்

0 0 0 0 0 0
 • 230
Info
Title:
தண்ணீர் இறைக்க பயன்படுத்தும் முறைகளை பாருங்கள்
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
03:02
Category:
Created:
Updated:
 ·   · 2 videos
 •  · 2 friends
 •  · 3 followers
Comments (0)
தண்ணீர் இறைக்க பயன்படுத்தும் முறைகளை பாருங்கள்
Empty
typing a message...
Connecting
Connection failed
Ads
Latest Videos
Advertisement
Ads
Featured Videos (Gallery View)
Ads
Added a news 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 19,788 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 144 பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 846 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 19 ஆயிரத்து 749 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 41 லட்சத்து 20 ஆயிரத்து 772 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 97 கோடியே 65 லட்சத்து 89 ஆயிரத்து 540- ஆக உள்ளது.
 • 75
Added a news 
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சியாமிஸ் நகரில் உள்ள உயர்நிலை பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் அங்குள்ள சிலியூர் ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.ஆசிரியர்களின் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். அப்போது மாணவர்களில் சிலர் ஆற்றில் இருந்த பாறைகள் வழியாக ஆற்றை கடக்க முயன்றனர்.21 மாணவர்கள் ஒருவரின் கையை ஒருவர் பிடித்தப்படி ரெயில் பெட்டி போல பாறையில் நடந்து சென்றனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென கால் இடறி ஆற்றுக்குள் விழுந்தார். அவரை தொடர்ந்து மற்ற 20 மாணவர்களும் அடுத்தடுத்து ஆற்றுக்குள் விழுந்தனர்.இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. கரையில் நின்று கொண்டிருந்த சக மாணவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் ஆற்றில் மூழ்குவதை கண்டு அலறினர்.மாணவர்களின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஆற்றுக்குள் இறங்கி மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளை பயன்படுத்தி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் இந்த தேடுதல் வேட்டை நீடித்தது.இருந்தபோதிலும் 11 மாணவர்களை பிணமாகத் தான் மீட்க முடிந்தது. அதே சமயம் 10 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவர்கள் 11 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
 • 74
Added a news 
எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லிற்கு 70 ரூபா விலையை நிர்ணயிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.கரிம உர பாவனையினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்காக வழங்கப்படும் நட்டஈடு தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை வௌியிடும் வரையில் பயிர்ச் செய்கையில் இருந்து விலகிக் கொள்வதாக விவசாயிகள் போராட்ட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மெதிரிகிரிய, கவுடுல்ல பகுதியில் உள்ள விவசாயிகள் இம்முறை பெரும்போகத்திற்கு அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் கரிம உரத்தை உற்பத்தியை ஆரம்பித்துள்ளனர்.எவ்வாறாயினும் குறித்த உரம் இதுவரையில் உக்காத காரணத்தினால் விவசாய நடவடிக்கைகளுக்கு அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 • 78
Added article 
பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். காலா படத்திற்கு பின்பு பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.இவர் நடித்த டெடி படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது கூட நீச்சல் குளத்தைத்தையே சூடேற்றும் வகையில், பச்சை நிற படு கிளாமரான உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.  
 • 79
Added article 
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள சூப்பர் ஹீரோக்களில் முதலிடத்தில் உள்ளவர் பேட்மேன். எந்த விதமான சூப்பர் பவரும் இல்லாதபோதும் தனது தொழில்நுட்பத்தால் குற்றங்களை தடுத்து பேட்மேனாக வலம் வரும் ப்ரூஸ் வெயினுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பேட்மேன் ஆரிஜின் குறித்து பல காலக்கட்டங்களில் வெவ்வேறு படங்கள் வெளியாகியுள்ளன. அதில் க்றிஸ்டோபர் நோலனின் டார்க் நைட் ட்ரைலாஜி பிரபலமானது. தற்போது மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் மீண்டும் பேட்மேன் ஆரிஜின் குறித்த படத்தை வார்னர் ப்ரதர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பேட்மேனாக ராபர்ட் பேட்டின்சன் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது டிசி பேண்டம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட நிலையில் 24 மணி நேரத்திற்குள்ளாக ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகியுள்ளது.
 • 79
Added article 
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். அப்போது கடந்த வாரம் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை போட்டியாளர்களுடன் உரையாடுவதை கமலஹாசன் வழக்கமாக வைத்துள்ளார்.வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறுபவரையும் கமலஹாசன் அறிவிப்பார். அந்த வகையில் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 15 போட்டியாளர்களும் மிகுந்த பதட்டத்துடன் ஒவ்வொரு நாளையும் கடக்கின்றனர்.பிரபல மலேசிய மாடல் அழகியான நாடியா சாங் என்பவர்தான் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.பிக்பாஸ் வீட்டில் நாடியா சாங், இருக்கும் இடம் தெரியாமலே மறைந்துவிட்டார். அத்துடன் சுவாரசியம் குறைந்த போட்டியாளரும் அவராகத்தான் உள்ளார். கமலே சென்றவாரம் நாடியா சாங்கை பார்த்து, உங்களது குரல் வீட்டில் ஒலிக்க வேண்டும். அதை ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர் என்று எச்சரிக்கை விடுத்தார்.இருப்பினும் நாடியா சாங், கடந்த வாரம் முழுவதும் தன்னுடைய நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் இல்லாதது போன்றே தெரிந்தது. இரண்டு வாரத்தில் நாடியா சாங் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த கன்டென்ட்டும் கொடுக்கவில்லை என்பதே ரசிகர்களின் பெரும் குற்றச்சாட்டாகும்.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லவிருக்கும் நாடியா சாங்கிற்கு டாடா காட்டி வழி அனுப்ப காத்துள்ளனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முதல் நபர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 • 81
Added article 
சன் டிவியில் 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்தொடரை இயக்குனர் திருமுருகன் இயக்கி  நடித்திருப்பார்.இயக்குனர் திருமுருகனுக்கு ஜோடியாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடிகை உமா மகேஸ்வரி நடித்திருப்பார். இவர்களின் ஜோடி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.மெட்டி ஒலி சீரியல் முடிந்த பின்பு உமா மகேஸ்வரி வேறு எந்த சீரியலிலும் நடிக்க வில்லை. இவர் நடிப்பதை நிறுத்தி விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். மாரடைப்பின் காரணமாக உமா மகேஸ்வரி இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.  40 வயதான உமா மகேஸ்வரியின் இழப்பு சின்னத்திரை வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உமா மகேஸ்வரி வெற்றிக்கொடிகட்டு எனும் திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனின் தங்கையாக நடித்துள்ளார்.
 • 80
Added a news 
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் அகமது ஷா அகமதுஜா (வயது 78).  கடந்த 1995ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.  தலீபான் பயங்கரவாத அமைப்புகளால் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படும் வரை பிரதமராக இருந்தவர்.இந்தியாவில் வசித்து வந்த அவர் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான அட்டாரி சோதனை சாவடி வழியே ஆப்கானிஸ்தானுக்கு திரும்பினார்.  இந்த நிலையில் அவர் காலமானார்.
 • 88
Added a news 
அரை ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட 3 இலட்சம் ரூபா உதவித் திட்டம் ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். விவசாய பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வு கம்பளை பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் சுற்றுசூழலுக்கு ஏற்ற விவசாய நடவடிக்கைகளுக்காக நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 22 இலட்சம் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் குறித்த உரத் தொகையின் முதல் தொகுதி எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டிற்கு எடுத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 • 91
Added a news 
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (17) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து MOH அலுவலகங்களிலும் ஃபைசர் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் துலிப் லியனகே தெரிவித்துள்ளார்.இதற்காக 18 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து பிள்ளைகளையும் அழைத்து வருமாறு அவர் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்நிலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் லிங்கின் ஊடாக தெரிந்து கொள்ளலாம்.http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977
 • 88
Added a news 
இலங்கை அரசாங்கத்தின் மீன் பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்படி நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவு- பருத்தித்துறை வரை இடம்பெற்ற போராட்டத்தின்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைக்கு காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இந்தப் போராட்டமானது இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமோ அல்லது இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டமோ அல்ல எனக் குறிப்பிட்டார்.தமிழ்நாடு மீனவர்களில் ஒருசிலர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, மீன்பிடித்துறை அமைச்சர் பார்த்தும் பாராது செயற்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
 • 91
Added a news 
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். நிதி அமைச்சர் தலைமையில் நேற்றைய (16) தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனான கலந்துரையாடலில் மேலதிக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர்கள் சிலரும் கலந்துகொண்ட போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொழில் சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இதுதொடர்பாக தெரிவிக்கையில், வரவு செலவு திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புபட்ட இணை சங்கங்களின் பிரதிநிதிகளை நிதி அமைச்சர் அலரிமாளிகைக்கு அழைத்திருந்தார்.இதன்போது ஒன்றை வருடகாலமாக மூடப்பட்டிருக்கும் மேலதிக வகுப்பு செயற்பாடுகளை, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்போது ஆரம்பிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டோம். அதற்கமைவாக மேலதிக வகுப்புகளை எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நடத்துவதற்கு தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்தார்.
 • 93
#பாதையை தேடுபவன் தலைவன் அல்ல...பாதையை உருவாக்குபவனே தலைவன்#.   
 • 110
 • 110
Added a post 
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?பிரதோஷம் மகிமைஅந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்;ஞாயிறு பிரதோஷம்:சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.பலன்:இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.திங்கள் பிரதோஷம்:பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.பலன்:மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.செவ்வாய் பிரதோஷம்:செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.பலன்:செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.புதன் பிரதோஷம்:புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.பலன்:புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.வியாழன் பிரதோஷம்:குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.பலன்:கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.வெள்ளி பிரதோஷம்:சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.பலன்:உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.சனி மஹா பிரதோஷம்:சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.பலன்:ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.அனைவருக்கும் பிரதோஷம் நல்வாழ்த்துக்களுடன் இனிய ஞாயிறு காலை வணக்கம். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி படித்ததில் பிடித்தது
 • 110
காலை வணக்கம்
 • 115
 • 115
Good Morning....
 • 115
Added a news 
கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் கொலை, பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில், ‘இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான உந்துதல்’ இருப்பதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.கொலை சந்தேகத்தின் பேரில் 25 வயதான பிரித்தானியர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இக்கொலை சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் தேடவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் லண்டன் பகுதியில் உள்ள இரண்டு முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.குறித்த சந்தேக நபர் தனியாக செயற்பட்டதாக பொலிஸ்துறை நம்புகிறது, ஆனால், இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 • 161
Added a news 
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகின் இரண்டாவது பொருளாதார சக்தியான சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங், காலநிலை உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.சீன ஜனாதிபதி இந்த உச்சி மாநாட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று அறிவுறுத்தப்பட்டதாக பிரித்தானிய அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.எனினும், சீன அதிகாரிகள் திட்டங்களை மாற்றுவதை முற்றிலும் நிராகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.ஜனாதிபதியின் பயணத் திட்டங்கள் குறித்து சீன அதிகாரிகள் உறுதியாக இல்லை என்றும், உச்சிமாநாட்டை ஆச்சரியப்படுத்த சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், தனது மனதை மாற்றி கடைசி நேரத்தில் வர முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.இதேவேளை, ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் பயணத் திட்டங்களை கடைசி நேரத்தில் சீனா அடிக்கடி அறிவிப்பதாக இராஜதந்திரிகள் கூறினர்.2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று கருதப்படுகிறது.2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடு, எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை கிளாஸ்கோவில் நடைபெறுகிறது.இந்த உச்சி மாநாட்டில், உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் உலகளாவிய வெப்பநிலை உயர்வைக் குறைப்பது பற்றி விவாதிக்கப்படும்.
 • 162
Added a news 
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 3,476பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 47பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில் இதுவரை 16இலட்சத்து 76ஆயிரத்து 873பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 468பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 34ஆயிரத்து 782பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 752பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 16இலட்சத்து 13ஆயிரத்து 623பேர் குணமடைந்துள்ளனர்.
 • 160
Added a news 
இலங்கையில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இன்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 649 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 531,070 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,305 ஆக அதிகரித்துள்ளது.மேலும் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது.
 • 159
Added a news 
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து ஆவேசமாக கடந்த பல ஆண்டுகளாக சீமான் பேசி வருகிறார் என்பதும் பிரபாகரனுடன் தான் நெருங்கி பழகி உள்ளதாகவும் போர்ப் பயிற்சியை நேரில் பார்த்ததாகவும் அவருடன் உட்கார்ந்து சாப்பிட்டதாகவும் குறிப்பாக ஆமைகறி சாப்பிட்டதாகவும் சீமான் பல மேடைகளில் கூறியுள்ளார்.சீமானின் இந்தப் பேச்சுக்கள் குறித்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டமொன்றில் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிரபாகரனை சீமான் இரண்டு நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் என்றும் புகைப்படம் எடுக்க கூட அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டது என்றும் மற்றபடி ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று கூறுவது அனைத்தும் பொய் என்றும் வைகோ கூறியுள்ளார்விடுதலைப்புலிகள் சீமான் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் பிரபாகரன் குறித்தும் விடுதலைப்புலிகள் குறித்தும் பொய்யான செய்திகளை சீமான் கூறி வருகிறார் என்றும் வைகோ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 • 161
Added a news 
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் கானின் மகன் ஆர்யன்கான் இப்போது விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 7 பேர் சொகுசுக் கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இப்போது அவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆர்யன்கானுக்கு அவர் தந்தை சார்பாக வீட்டில் இருந்து உணவு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் அதை மறுத்தது. சிறையில் உள்ள காண்டீனில் பொருட்கள் வாங்கிக் கொள்ள சிறைவிதிகளின் படி 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியுள்ளார். வீடியோ கால் மூலமாகவும் குடும்பத்தினருடன் ஆர்யன்கான் பேசியுள்ளாராம்.
 • 160
Added a news 
எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க. தனது பொன்விழா ஆண்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலடி எடுத்து வைக்க உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தில்  மலர் தூவி கண்ணீர் செல்க மரியாதை செலுத்தினர்.  சசிகலா வருகையால் அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திரண்டனர்.  முன்னதாக, வழக்கம் போல அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வருகை தந்தது  குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து வந்த பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது இதுவே முதல் தடவையாகும்.  இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன். அதிமுகவையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன். ஜெயல‌லிதா நினைவிடத்திற்கு நான் வந்த‌தற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர் என்றார்.
 • 160
Added a news 
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவா், உடல் சோர்வாக இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடா்ந்து 16-ம் தேதி  மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டார்.  மன்மோகன் சிங்குக்கு ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அது தொடா்பான பரிசோதனையும் அவருக்கு நிபுணா்களால் மேற்கொள்ளப்பட்டது. இப்போது, அவரது உடல்நிலை சீராகவும், முன்பை விட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்  எய்ம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை மந்திரி  மன்சுக் மாண்டவியா, மருத்துவமனைக்குச் சென்று மன்மோகன் சிங் உடல்நலம் குறித்து விசாரித்தார். கடந்த ஏப்ரலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடலில் ரத்தத் தட்டுக்கள் மெல்ல அதிகரித்து வருவதாகவும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 • 162
Added a news 
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகின் சுவையான உணவுகளை குறித்து பேசுவதற்காக மட்டுமில்லாமல், சாப்பிட வாய்ப்பில்லாத பசி, பட்டினியோடு இருக்கும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டது. பல நாடுகளில், குறிப்பாக உலகின் வளர்ச்சியடையாத பகுதிகளில், பட்டினி என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். இந்த சிக்கலை தீர்க்க அது பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது. இந்த ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு என்பதாகும். பசி இல்லாத சூழலை உருவாக்க பங்களிக்கும் தனிநபர்களைப் பாராட்டுவதற்கான அடிப்படையில் இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் கருப்பொருள் கொரோனா தொற்றின் போது கோடி கணக்கான மக்கள் அனுபவித்த துன்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 • 161
Added article 
சுமார் 17 இலட்சத்திற்கு வீட்டை அழகாக மாற்றி வந்த நடிகையை அந்த வீட்டில் வேலை செய்பவர் மிரட்டி துரத்தி விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  எஸ். ஜே. சூர்யா இயக்கிய அன்பே ஆருயிரே போன்ற சில பல தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா. இவரது உண்மை பெயர் மீரா சோப்ரா. கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கவர்ச்சியை மட்டும் நம்பி சினிமாவில் காணாமல் போன சில நடிகைகளில் இவரும் ஒருவர். அப்படி இருந்த போதிலும்  இவருக்கு  பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வந்த வண்ணம்தான் இருக்கின்றன. ஹிந்தியில் வெப்சீரிஸ் போன்றவை அதிகமாக எடுக்கப்படுவதால் அதில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.நடித்து சம்பாதித்த பணத்தை வைத்து தான் சமீபத்தில் தன்னுடைய வீட்டை சுமார் 17 லட்சம் செலவில் வீட்டிற்குள் இருக்கும் இன்டீரியர் டிசைன்களை மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக ஒரு டிசைனரிடம் சுமார் 17 லட்சம் பட்ஜெட்டில் வீட்டிற்கான பாதி பணத்தை முன்கூட்டியே கொடுத்து விட்டாராம்.நடிகையை பார்த்து நன்றாக ஏமாற்றலாம் என முடிவு எடுத்த அந்த நபர் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி வீட்டை வேலை செய்து வந்துள்ளார். இதை கவனித்த நிலா அந்த நபரை திட்டித் தீர்க்க கோபமடைந்த அந்த நபர் நிலா கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டாராம்.சொந்த வீட்டில் இருந்தே தன்னை வெளியே அவமானப்படுத்தி துரத்தி விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார் நிலா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தெலுங்கு சினிமாவில் தேவையில்லாமல் வாய்விட்டு ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டார்.
 • 160