• 113
  • More
 ·   ·  51 jokes
  •  ·  5 friends
  • I

    9 followers

டைலர்

ஒருவா் டைலர் கிட்ட சட்டை தைக்கத் துணி எடுத்துகிட்டுப் போனார்.
டைலர் துணியை அளந்து பாத்துட்டு,துணி பத்தாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டார்.
.அவரும் வேறு ஒரு டைலர் கிட்ட இதே துணியை எடுத்துகிட்டு போனார்.
டைலர் அளந்து பாத்துட்டு, இவருக்கும் அளவு எடுத்து கிட்டு 5 நாள் கழிச்சு வரச் சொன்னார்.
5 நாள் கழிச்சு இவுரு போனார்.
சட்டை ரெடி.போட்டுப் பாத்தாரு. சரியா இருந்தது.
அப்ப டைலரோட மகன் சின்னப் பையன் அங்கு வந்தான்,   அவனும் இவர் குடுத்த அதே துணியில் சட்டை போட்டிருந்தான்.
இவரு ஒண்ணும் பேசலை.
நேரா விருவிருன்னு பழைய டைலர் கிட்ட வந்தாரு. யோவ், நீ தைக்க.மாட்டேன் , துணி பத்தாதுன்னு சொன்னே இதப்பாருய்யா நான் சட்டை போட்டிருக்கேன், அதுவில்லாம அவர் மகனுக்கும் இதே துணில சட்டை தெச்சுப் போட்டிருக்காரு.
 நீ டைலரே இல்லைன்னு சத்தம் போட்டாரு.
அந்த டைலர் கேட்டாரு, சார் அந்தப் பையனுக்கு என்ன வயசிருக்கும்ன்னு கேட்டாரு.என்ன இரண்டு வயசு இருக்கும்ன்னாரு.
*உடனே டைலர் சொன்னாரு, என் மகனுக்கு ஒம்பது வயசு.*
Comments (0)
Login or Join to comment.
Latest Jokes (Gallery View)
1-14