அறிவோம் ஆன்மீகம்

Membership
Standard
Info
Who can post to my profile:
Array
Organization Name:
அறிவோம் ஆன்மீகம்
Category:
Friends count:
Followers count:
Administrators
Achievements

Basic

Total points: 741

4261 point(s) to reach
Comments (0)

    ஆன்மீக கதைகள், ஆன்மீக செய்திகள், கோவில்கள் பற்றிய தகவல்கள்.

    Joined Organizations
    அறிவோம் ஆன்மீகம்
    Empty
    typing a message...
    Connecting
    Connection failed
    Added a post 
    'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்'  என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம். 'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே'  என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு. இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம். மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும். தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும். இதனால் இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர். 'ஆழி' என்பது சக்கரமாகும். மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது. 1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர். பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ம் தேதி மீண்டும் ஓடியது. இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது. அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும். இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர். 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும். நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை. வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும். இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகர்ந்து விடுகிறது.
    • 84
    Added a post 
    உடனடியாக பசியைத் தணிக்க விரும்பினாலோ, பயணத்தின்போது சாப்பிட ஆசைப்பட்டாலோ சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும். இதனை எந்த நேரத்திலும் சாப்பிட முடியும். வாழைப்பழம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான 10 காரணங்களையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம். எல்லா வகையான வாழைப்பழங்களிலும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி, செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இயற்கை சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் உள்ளன. அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் சிற்றுண்டி உணவாகவும் அமைந்திருக்கின்றன. வாழைப்பழத்தில் இருக்கும் மெக்னீசியம் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். குறைந்த கலோரிகளே கொண்டிருப்பதும் வாழைப்பழத்தை பலரும் விரும்ப காரணமாக அமைந்திருக்கிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு தேவையான சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க பொட்டாசியம் முக்கியமானது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழமாவது தவறாமல் உட்கொள்ள வேண்டும். வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரை விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றன. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியை கொடுக்கும். உடற்பயிற்சியையும் உற்சாகமாக செய்யத் தூண்டும். மதிய உணவுக்குப் பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதும் நல்லது. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை பேண உதவும். பெக்டின் குடல் இயக்கத்தை ஊக்குவித்து செரிமானம் சுமூகமாக நடைபெறுவதற்கு உதவிபுரியும். மலச்சிக்கலையும் தடுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வயிற்று கோளாறு அல்லது செரிமானம் சார்ந்த அசவுகரியங்களை எதிர்கொள்பவர்களுக்கு வாழைப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வாழைப்பழங்கள் எளிதாக ஜீரணமாகும். வயிற்றில் ஏற்படும் வலியை போக்கவும் உதவும். பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் போன்ற உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதய நோய் மட்டுமின்றி பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும். வாழைப்பழங்களில் கலோரிகள் மட்டுமின்றி கொழுப்பின் அளவும் குறைவு. அவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் அதிக பசியை கட்டுப்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உடல் எடையை சீராக பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாக அமையும். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. வைட்டமின் பி6 செரோடோனின்,டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்திக்கு துணைபுரியக்கூடியது. இது மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமம் விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறுவதை தடுக்கும். தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு வித்திடும். வாழைப்பழங்கள் ஆரோக்கியமான முறையில் உடலின் இனிப்பு தேவையை பூர்த்தி செய்யக்கூடியவை.
    • 34
    Added a post 
    கொழுக்கட்டை இல்லாத விநாயகர் சதுர்த்தியே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு முக்கியமான இந்த கொழுக்கட்டையை பலரும் பல வகைகளில் செய்வார்கள்.இதில் பிடி கொழுக்கட்டை பூரண கொழுக்கட்டை என எத்தனையோ வகைகள் உண்டு.பூரண கொழுக்கட்டையை ரொம்ப சுலபமாக அதே நேரத்தில் ருசியாக எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். விரிசல் இல்லாத பூரண கொழுக்கட்டை செய்ய முதலில் அரை கப் பொட்டுக்கடலை இரண்டு ஏலக்காவை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் முக்கால் கப் அளவு வெல்லத்தை பொடித்து சேர்த்து வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வெல்லம் கட்டிகள் இல்லாமல் கரையும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு பேன் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அரைக் கப் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் ஏற்கனவே கொதிக்க வைத்து இருக்கும் வெல்லத் தண்ணீரை வடிகட்டி இதில் சேர்த்த பிறகு அரைத்து வைத்த பொட்டுக்கடலை மாவையும் இதில் சேர்த்து சிறிது நேரம் கைவிடாமல் கலந்த பிறகு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடுங்கள். கொழுக்கட்டைக்கு தேவையான பூரணம் தயாராகிவிட்டது.அடுத்து கொழுக்கட்டைக்கான மாவு. பவுலில் ஒரு கப் கொழுக்கட்டை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் பவுடர், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்த பிறகு தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டி வைத்து மாவை கலந்து விடுங்கள். தண்ணீர் சூடாக இருக்கும் எனவே கை வைக்காமல் கரண்டி வைத்து கலந்து விடுங்கள். மாவு ரொம்ப தண்ணீராக கரைத்து விடாமல் நல்ல கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் கை பொறுக்கும் சூடில் இருக்கும் போதே நன்றாக பிசைந்து வைத்து விடுங்கள். அடுத்து ஒரு சிறிய வாழை இலையில் நெய் தடவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டை மாவை சின்ன உருண்டையாக எடுத்து லேசாக தட்டிய பிறகு பூரணத்தை கொஞ்சமாக எடுத்து அதில் வைத்து இரண்டு புறமும் மாவை ஒன்றாக சேர்த்து விட அருமையான கொழுக்கட்டை தயார். கொழுக்கட்டையை வேக வைக்க இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு இட்லி தட்டை வைத்து நீங்கள் தயார் செய்து வைத்து இந்த கொழுக்கட்டைகளை வைத்து மூன்று நிமிடம் வரை மூடி போட்டு வேக வைத்து எடுத்து விடுங்கள். நல்ல பஞ்சு போல மிருதுவான அதே நேரத்தில் இனிப்பான சுவை மிகுந்த பூரண கொழுக்கட்டை தயார். 
    • 29
    Added a post 
    விசேஷ நாட்களில் வீட்டில் பூஜை செய்வதை நாம் காலம் காலமாக கடைப்பிடித்து கொண்டு வருகிறோம். இது வீட்டிற்கு நல்ல ஒரு சுபிச்சத்தையும், தெய்வக் கடாட்சத்தையும் தரும். இதை செய்ய யாரும் தயங்குவது கிடையாது. ஆனால் இதை செய்வதற்காக நாம் இந்த பூஜை பாத்திரங்களை துலக்கி எடுக்கும் வேலையை நினைத்தால் தான் இந்த பூஜையை பற்றிய பயமே வந்து விடும். ஏனெனில் இதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் உடனே அதில் எண்ணெய் பிசுக்கு படிந்து விளக்குகள் கருப்படைந்து தேய்ப்பதற்கு மிகவும் கடினமாகி விடும். பல வருடங்களாக எண்ணெய் பிசுக்கு படிந்து பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பூஜை பாத்திரங்களை கூட பளிச்சென்று மாற்ற ஒரு அருமையான அதே நேரத்தில் மிகவும் எளிதாக செய்யக் கூடிய ஒரு டிப்ஸ் பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய முதலில் பூஜை பாத்திரங்கள் மீது இருக்கும் அழுக்கு எண்ணெய் பிசுக்குகளை ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து விடுங்கள். அதன் பிறகு நன்றாக புளித்த தயிரை எடுத்து பூஜை பாத்திரங்களின் மீது தேய்த்து ஐந்து நிமிடம் வரை அப்படியே ஊற விட்டு விடுங்கள். இப்பொழுது நாம் விளக்குகளை தேய்ப்பதற்கான பேஸ்ட்டை தயார் செய்து கொள்வோம். 2 ஸ்பூன் கோதுமை மாவு, 2 ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்விட், 1 ரூபாய் ஷாம்பு பாக்கெட்டில் உள்ள ஷாம்பையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவை நீங்கள் பயன்படுத்தும் பூஜை பாத்திரங்களின் அளவிற்கு ஏற்றார் போல் கூடவோ குறையவோ செய்து கொள்ளுங்கள். அடுத்து குழைத்த இந்த பேஸ்ட்டை பூஜை பொருட்களின் மீது தேய்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். இந்த பேஸ்ட் தேய்த்து ஐந்து நிமிடம் ஆன பிறகு பூஜை பாத்திரங்களை ஒரு ஸ்க்ரப்பர் வைத்து லேசாக தேய்த்து பாருங்கள். நீங்கள் புதிதாக கடையில் வாங்கிய பூஜை பாத்திரங்கள் போல பல பளப்பளவென்று நீங்கள் தேய்க்கும் போதே மின்ன ஆரம்பித்து விடும். அதன் பிறகு பாத்திரங்களை நல்ல தண்ணீர் கொண்டு கழுவி காட்டன் துணி வைத்து துடைத்த பிறகு வெயிலில் காய வைத்து எடுத்த பின் பூஜைக்கு பயன்படுத்துங்கள்.இந்த முறையில் நீங்கள் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்து வைத்தால் அப்போது தான் கடையில் வாங்கி வந்தது போல பளபளவென்று மின்னும்.இதில் சேர்த்து இருக்கும் பொருள் எல்லாம் நம் வீட்டில் எப்போதும் இருக்கும் எளிமையான பொருள் தான். இதை வைத்து தேய்க்கும் போது நாம் கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியமும் இருக்காது எளிமையாகவே சுத்தம் செய்து விடலாம். 
    • 28
    Added a post 
    அகோர வீரபத்திரருக்கு விரதமிருக்க விரும்புவோர் மாசிமாதம் கிருஷ்ணபட்சம், பிரதமைதிதி, பூரம் நட்சத்திரம், ஞாயிற்றுக் கிழமையன்று விரதம் தொடங்க வேண்டும். ஏனெனில் இந்நாளில் இரவு 12 மணிக்குத்தான் அகோர வீரபத்திரர் தோன்றினார் என்பர். திருவெண்காட்டில் அகோர வீரபத்திரருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர் தோன்றிய நாளில், நேரத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் இரவில் அகோர பூஜை செய்யப்படுகிறது. கார்த்திகை மாதம் ஈசனுக்கு உகந்தது என்பதால் கார்த்திகை ஞாயிறு வழிபாடு சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இவ்வழிபாட்டில் பசுவின்பால், பால்சாதம், எலுமிச்சை சாதம், மஞ்சள் நிற இனிப்பு வகைகள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைப்பது சிறப்பாகும். அகோர வீரபத்திரரை ஈசனுக்குரிய திங்கட்கிழமையன்றும் பிரதோஷ நாளன்றும் நித்திய பிரதோஷ நேரத்திலும் சிவராத்திரி தினத்தன்றும் வழிபடுவது மிகமிக நன்று. இத்தகு வழிபாடுகள் வாழ்வியல் சிக்கல்களை நீக்கிடவும் எடுத்த செயல்களில் வென்றிடவும் உதவும்.
    • 102
    My Posts