Ads
 ·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

தேங்காய் பால் சர்பத்

தேங்காய் பால் வைத்து அருமையான சர்பத் ஒன்று செய்யலாம் வாங்க. அதிக இரும்புச்சத்து நிறைந்திருக்கும் தேங்காய் பால் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியை அளிக்கிறது..

முதலில் இந்த சர்பத் செய்வதற்கு ஒரு பாதி தேங்காயை நன்கு துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் 5 ஊற வைத்த பாதாம், ஐந்து ஊறவைத்த முந்திரி, மில்க் மேட் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு கண்ணாடி டம்ளரில் இரண்டு ஐஸ் கட்டிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஊறவைத்த பாதாம் பிசின் ஒன்றரை தேக்கரண்டி, ஊறவைத்த சப்ஜா விதைகள் ஒரு தேக்கரண்டி, இப்பொழுது மிக்சியில் அரைத்த தேங்காய்ப்பால் ஒரு தேக்கரண்டி நாட்டுச்சக்கரை, தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

நாட்டு சக்கரைக்கு பதிலாக தேன் கலந்து கூட நாம் இந்த சர்பத்தை செய்யலாம். தேவையான அளவு இனிப்பு சரிபார்த்து மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக பொடியாக நறுக்கிய முந்திரிகளை மேலே தூவி கலந்து குடிக்க கொடுத்தால் சுவையான தேங்காய் பால் சர்பத் தயார். இந்த சர்பத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். குளிர்ச்சி விரும்பாதவர்கள் இந்த சர்பத்தில் ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளாமல் அப்படியே குடித்து வரலாம்.

மிதமான இனிப்பில் உடலுக்கு பல சத்துக்களை தரக்கூடிய இந்த தேங்காய் பால் சர்பத் வாரத்தில் நான்கு முதல் ஐந்து நாட்கள் குடிக்கும் பொழுது இரும்புச்சத்து அதிகரித்து வெயிலின் தாக்கத்திலிருந்து தண்ணீர் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

  • 1897
  • More
Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads