மின்சாரக் கட்டணக் குறைப்பால் 40 இலட்சம் பேர் பயனடைவது உறுதி - ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலாகும் என அமைச்சர் கஞ்சன
மின் கட்டணம் ஜூலை முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டதும் 68 இலட்சம் பாவனையாளர்களில் 40 இலட்சம் பேர், பயனடையவுள்ளதாக மின்சக்தி,வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
நிவாரண நடவடிக்கைகளில் ஒரு காலத்தில் சகல வீடுகளுக்கும் காப்புறுதி செய்யப்பட்டிருந்தது. அரசாங்கத்தினால் அந்த காப்புறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் மதிப்பீடு செய்து பாதிப்புகளின் பெறுமதியை கணிக்கும்போது அது மிகக் குறைவானதாகவே காணப்படும். இவ்வாறு மதிப்பீடு செய்து மக்களுக்கு வழங்கப்படும் பிரதிபலன்கள் தொடர்பில் சிக்கல்கள் ஏற்படலாம்.
எனினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தினால் காப்புறுதி செய்ய முடியாது.
மக்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் சேதமடைந்த வளங்களை சீரமைத்தல் என அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒருபுறம் நாம் அரசாங்கத்தின் வளங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது.
வீதிகள், பாலங்கள் வடிகான்கள், பாடசாலைகள் போன்றவை இதில் உள்ளடங்குகின்றன. மறுபுறம் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமையையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கக்கூடிய இதற்கான வேலை திட்டங்களின் மட்டுப்படுத்தல் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவற்றை மிகவும் கவனமாக முன்னெடுக்க வேண்டும். முறையற்ற விதத்தில் அவற்றை முன்னெடுத்து மீண்டும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வர முடியாது.இருந்தபோதும்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். செலவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்திலேயே அதனை முன்னெடுக்க முடியும்.முடிந்தளவு அரசாங்கம் நட்டஈட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும்.
முழு நாட்டிலும் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்தே அரசாங்கம் தீர்மானம் எடுக்கும்.சபையில் சண்டித்தனம் காட்டி எதிர்க்கட்சி கேட்பதையெல்லாம் எம்மால் வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000