நாட்டின் வங்குரோத்து நிலையை இல்லாதொழிப்பதற்கான திட்டமே நிதி முகாமைத்துவ சட்ட மூலம் - அமைச்சர் பந்துல
நாட்டின் வங்குரோ த்து நிலையை இல்லாதொழிப்பதற்காகவே அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று ஆக்கபூர்வமாக உறுதிப்படுத்தி மீண்டும் நாடு வங்குரோத்து அடையாத நிலையை உருவாக்கிய வரலாற்றின் ஒரேயொரு தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை மேற்கொண்டு நாட்டை மீண்டும் சுவாசிக்கச் செய்ய ஜனாதிபதியால் முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் நாட்டின் எந்த இடத்திலும் வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. வெளிநாட்டிலிருந்து பாரிய நிதி உதவியைப் பெற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அந்த வகையில் அந்த மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்கனவே இருந்ததைவிட சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான கடனை தற்போது நாட்டின் அனைத்து மக்களும் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் 2003 இன் கீழ் 3 இலக்க நிதி முகாமைத்துவ சட்ட மூலம் நாட்டின் வங்குரோத்து நிலையை இல்லாதொ ழிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000