ரஷ்யாவால் பிரித்தானியா மீது அணுகுண்டு வீசாது - பிரித்தானிய பேராசிரியர் தெரிவிப்பு
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முன்வைத்துள்ள, 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை திட்டம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக அமையும் என பிரித்தானிய பேராசிரியரான Anthony Glees தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மீது விளாடிமிர் புட்டின் அணுகுண்டு வீசமாட்டார் எனவும், அவ்வாறு வீசினால் அது அனைவருக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்பது புட்டினுக்கு தெரியும் என பேராசிரியர் Anthony Glees குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பாரம்பரிய முறைப்படியான போர் செய்துதான் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற விரும்புவார் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பலரது விமர்சனத்துக்குள்ளாகியுள்ள, பிரித்தானிய பிரதமரின், 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை திட்டம், நல்ல பலனைத் தரும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது தமது நாட்டில் போர் செய்ய போதுமான வீரர்கள் இருக்கும் பட்சத்தில், பிரித்தானியா மீது போர் தொடுக்கும் விளாடிமிர் புட்டினுடைய எண்ணம் அதிலிருந்து பின்வாங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, அணு ஆயுதங்களாலும் சைபர் தாக்குதல்களாலும் ஒரு நாடு போரில் வெற்றி பெற முடியாது என வலியுறுத்தியுள்ள பேராசிரியர் Anthony Glees, போர் வீரர்கள் மூலமே வெற்றிபெறமுடியும் என்பதை, ரிஷியின் கட்டாய இராணுவ சேவை திட்டத்தை எதிர்ப்பவர்களும், முறுமுறுப்பவர்களும் புரிந்துகொள்ளவேண்டும் என அவா் மேலும் தெரிவித்துள்ளார்.
000