Ads
நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மண்ணைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டத சீனா!
சீனா கடந்த மே மாதம் 3 ஆம் திகதி Change - 6 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த நிலையில் குறித்த விண்கலம் முதன்முதலில் நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மண்ணைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன விண்வெளி ஆய்வு மையம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது. குறித்த விண்கலமானது சேகரிக்கப்பட்ட 2 கிலோ மண் மாதிரியை வெற்றிகரமாக கொண்டுவரும் பணியை செய்து முடித்தால், அவ்வாறு செய்யும் முதல் நாடாக சீனா மாறும்.
இந்த மாதிரியை ஆய்வு செய்வதன் மூலம் சந்திரன், பூமி மற்றும் சூரியக் குடும்பத்தின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி தொடர்பான தடயங்களைப் பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads