Ads
சீரற்ற காலநிலை - ஜெர்மனியில் அவசரகால நிலை அறிவிப்பு - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
ஜெர்மனியில் நிலவும் சீரற்ற காலநிலையால் சில பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பவேரியா, பேடன் வுர்ட்டம் பேர்க் மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் , மக்கள் தங்குவதற்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Info
Ads
Latest News
Ads