Ads
மழையால் நோயாளிகள் பாதிப்பு
நெலுவ வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அவசர சிகிக்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நோயாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் ஹெலிகொப்டரில் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
வெள்ளம் ஏற்பட்டதால் வீதிகளால் அம்பியுலன்ஸ் வண்டிகள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால், உடுகம வைத்தியசாலைக்கு பயணிகள் மாற்றப்பட்டனர்.விஷேட ஹெலிகொப்டரில் நோயாளர்களை அனுப்பியதாக காலி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அமில சந்திரசிறி தெரிவித்தார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக ஜின்கங்கை பெருக்கெடுத்து, தவலம பிரதேசத்தில் இருவர் காணாமல் போயுள்ளதாக காலி மாவட்ட பதில் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads