ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடைக்கால வரவு - செலவுத் திட்டம்?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தினை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளதால், வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு இல்லை எனவும், இதன் காரணமாக இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை தயாரிப்பது பொருத்தமானது எனவும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தேர்தல் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வேலைத்திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான இலக்குகளை அடைவதற்கும் அவசியமான ஏற்பாடுகளை ஜனாதிபதி தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எதிர்வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கையை சிக்கல் இன்றி நிறைவுசெய்யக்கூடி வகையில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000