Ads
பெண் என நினைத்து ஆண் ஒருவரை திருமணம் செய்த இளைஞர்
இந்தோனேஷியாவை சேர்ந்த ஏ.கே என்ற நபர் சமூக வலைதளம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய அந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி காதலாக மலர்ந்துள்ளது. திருமணத்தன்று அந்த பெண் புர்கா அணிந்து இருந்ததால் ஏ.கேவால் பெண்ணின் முகத்தை பார்க்க முடியவில்லை.
திருமணத்திற்கு பின் ஏகே அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க முயன்றபோதும் அதற்கு அந்த பெண் ஏதோ சொல்லி தட்டிக்கழித்துள்ளார். பெண்ணின் நடவடிக்கைகளில் ஏகேவுக்கு சந்தேகம் வந்துள்ளது.
பெண்ணை ஏகே சோதித்தபோது அது பெண்ணே இல்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏகேவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது ஒரு ஆண். ஏகேவின் சொத்துக்களுக்காக பெண் வேடத்தில் வந்து திருமணம் செய்து கொண்டு 12 நாட்களாக குடும்பமும் நடத்தி வந்துள்ளார் அந்த ஆண்.
Info
Ads
Latest News
Ads