Ads
ரஷ்யாவின் எதிர்கால ஜனாதிபதியாக போகும் நபர் பற்றிய தகவல்
ரஷ்ய ஜனாதிபதியான புடின், தனது முன்னாள் பாதுகாவலர் ஒருவருக்கு புதிய உயர் பதவி ஒன்றை வழங்கியுள்ளார். அவரது பெயர் அலெக்ஸி ட்யுமின். புடின், ட்யுமினுக்கு, புதன்கிழமையன்று, மாகாண ஆலோசனைக் கவுன்சில் செயலர் என்னும் உயரிய பதவியை வழங்கியுள்ளார். அலெக்ஸி ட்யுமின், புடினுடைய பாதுகாவலராக இருந்தவர் ஆவார்.
மார்ச் மாதம் புடின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, மே மாதம் அவர் ட்யுமினை மாஸ்கோவுக்கு வரவழைத்து தனக்கு அருகே வைத்துக்கொண்டார். புடின் ஆதரவாளரும், கிரெம்ளின் ஆலோசகருமான Sergei Markov என்பவர், நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்ட இந்த விடயம், புடின் விருப்பத்தின்படி, ட்யுமின் ரஷ்யாவின் எதிர்கால ஜனாதிபதியாவார் என்பதை உறுதி செய்யும் விடயமாக பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads