உயர்தர பரீட்சையில் யாழ். இந்துவில் 56 மாணவர்களுக்கு 3 ஏ சித்தி - பரீட்சை மீளாய்வுகளை 5 ஆம் திகதிமுதல் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று மதியம் வெளியாகியிருந்த நிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் 2 ஏபி சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மேலும் 2 ஏபி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏசி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏஎஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ2பி சித்திகளை 12 மாணவிகளும், ஏபிசி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர்.
அத்துடன் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் முதலிடத்தைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த மாணவன் அகில இலங்கை மட்டத்தில் 47 வது நிலையை பெற்று தென்மராட்சி மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதனிடையே வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விஞ்ஞான பிரிவை சேர்ந்த 3 மாணவர்கள் 3ஏ (3A) சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அதற்கமைய, உயிரியல் விஞ்ஞான பிரிவில் விநாயகச்செல்வன் ஆர்த்திகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் நாகராஜா ஹரீஷன் மற்றும் ஜெகதீபன் அஜய் ஆகியோர் 3ஏ (3A) சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன், உயிரியல் விஞ்ஞான பிரிவில் ராகவன் சேந்தன் 2ஏ பி (2A B) சித்தியையும் ஜெயக்குமாரன் சிந்துயன் பி 2சி (B 2C) சித்தியையும் ததீஸ்வரன் தஸ்வின் 3சி (3C) சித்தியையும் விஜயரஞ்சன் சாருஜன் சி 2எஸ் (C 2S) சித்தியையும் பெற்றுள்ளனர்.
மேலும், பௌதீக விஞ்ஞான பிரிவில் நகுலேஸ்வரன் நிருஷன் 2ஏ பி (2A B) சித்தியையும் நந்தகுமார் கபீசன் ஏ 2பி (A 2B) சித்தியையும் சிவதர்சன் சந்தோஷன் ஏபிசி (A B C) சித்தியையும் டியாஸ் டானியல் பி 2சி (B 2C) சித்தியையும் உதயராசா ஜீவதாஸ் பி 2எஸ் (B 2S) சித்தியையும் ஜெயராஜ் சண்முகப்பிரியன் 3சி (3C) சித்தியையும் லெமன் கோயேந்திரன் சந்தோஷ் சி 2எஸ் (C 2S) சித்தியையும் சத்தியதாஸ் டினிஸ்காந் சி 2எஸ் (C 2S) சித்தியையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியாகியுள்ளன. இதில் 2 இலட்சத்து 69 ஆயிரத்து 613 பேர் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்
அத்துடன் 190 பரீட்சார்த்திகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இதேவேளை - பரீட்சை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000