OpenAI இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக மீரா முராட்டி நியமனம்
முன்பு OpenAI தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக திரைக்குப் பின்னால் பணி புரிந்து வந்தவர்தான் மீரா முராட்டி. தற்போது இவர் OpenAI இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் ChatGPT அறிமுகம் ஆனபோது ஸ்டாராக அனைவரின் கண்ணுக்கும் தெரிந்தவர் சாம் ஆல்ட்மேன். ChatGPT என்றால் என்ன? அதன் பயன்பாட்டை உலகிற்கு தெரியப்படுத்தியவர். தற்போது அவர்மீது நம்பிக்கை இல்லை என்று அவரை தலைமை நிர்வாக பதவியில் இருந்து OpenAI நிறுவனம் நீக்கியுள்ளது. ChatGPT பல்வேறு செயற்கை திறன்களைக் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட். கவிதை மற்றும் கலை வேலைப்பாடுகள் தொடர்பான தகவல்களை வினாடிகளில் வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சிலிக்கான் வேலியில் உதித்த புதிய நட்சத்திரமான சாம் ஆல்ட்மேன் உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களைச் சந்திக்க உலகம் முழுவதும் பயணம் செய்து AI தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தார். பல்வேறு மேடைகளில் பேசி இருந்தார். சமூகத்தில் AI கொண்டு வர இருக்கும் தாக்கங்கள் குறித்து விவாதித்தார்.
தற்போது, ஆல்ட்மேனின் நீக்கம் தொழில்நுட்ப உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த திடீர் பதவி நீக்கம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.