ஆப்பிள் இணை நிறுவனர் மருத்துவமனையில் அனுமதி
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் வோஜ்னியாக் (வயது 73) உடல்நலக்குறைவால் மெக்சிகோ சிட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டிருக்க கூடும் எனத் தெரிவிக்கின்ற போதிலும் தீவிர பாதிப்பு இல்லை என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகன் மாகாணத்தின் சான்டா பே பகுதியில் நடைபெற்ற உலக வர்த்தக கூட்டமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், அவருடைய உடல்நலம் பாதிப்படைந்துள்ளது.
கடந்த 1976-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் சேர்ந்து, ஆப்பிள் கம்ப்யூட்டர் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை வோஜ்னியாக் தொடங்கினார். அதன்பின் உலகம் முழுவதும் ஆப்பிள் தயாரிப்புகள் பிரபலமடைந்தன.
லேப்டாப், டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் ஐபோன் மொபைல் போன்கள் உள்ளிட்டவை, அவற்றின் வடிவம் மற்றும் சிறப்பம்சங்களால், வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்தன.