2030 ஆண்டிற்குள் இந்திய பொருளாதாரம் 3 வது இடத்தைப் பிடிக்கும்- அமைச்சர் ஜெய்சங்கர்
துக்ளக் இதழின் 53 வது ஆண்டு நிறைவு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவிற்கு அதன் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது, மறைந்த பத்திரிக்கை ஆசிரியர் சோ எழுதிய "நினைத்துப் பார்க்கிறேன்" என்ற நூலை வெளியிட்டார்.
அதன்பின்னர் அவர் பேசுகையில், இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3.2 கோடி மக்கள் தற்போது வெளி நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்திய மக்களே அதிகளவில் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். இவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது. கடந்தாண்டு உக்ரைன் மீதான ரஷிய போரின் போது, அங்குப் படித்து வந்த மாணவர்கள், மகக்ளை அரசு மீட்டது என தெரிவித்தார்.
மேலும், இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கிறது. தற்போது 5 வது இடத்தில் உள்ள இந்தியா வரும் 2030 ஆண்டிற்குள் 3 வது இடத்திற்கு வரும் எனவும் அந்தளவு உலகில் இந்திய பொருளாதாரத்தின் தாக்கல் எதிரொலிப்பதாகவும் கூறினார்.