பொங்கல் பணம் வங்கி கணக்கிலா? கையில் கொடுக்கப்படுமா? – ராதாகிருஷ்ணன் விளக்கம
ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கலுக்கு இலவச பச்சரிசி, கரும்பு சர்க்கரையுடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் தொகை ரூ.1000 மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுமா அல்லது வங்கி கணக்கில் அனுப்பப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. வங்கி கணக்கில் அனுப்பினால் எந்த இடையூறும் இன்றி மக்கள் முழு தொகையையும் நேரடியாக பெற முடியும் என பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் குறைந்த அவகாசமே உள்ள நிலையில் மக்களின் வங்கி கணக்கை பெற்று பணம் அனுப்புவது சாத்தியமற்றது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் பணம் வழங்குதல் குறித்து பேசியுள்ள கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நேரடியாக ரூ.1000 வழங்குவதில் எந்த சிக்கலும் எழாது என்றும், மக்களுக்கு முழுமையாக பொங்கல் தொகை வழங்கப்படும் என்றும் பயோமெட்ரிக் முறையில் வெளிப்படை தன்மையுடன் பணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.