சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  7800 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பெரு நாட்டின் முதல் பெண் அதிபராக டினா பதவி ஏற்பு

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார். அவர் மீது சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் வலுத்து வந்தன. ஆனால் அவை தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி என கூறி அவர் நிராகரித்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிரடியாக அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, அந்த நாட்டின் டெலிவிஷனில் தோன்றிப் பேசினார். நாட்டில் அவர் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். 

நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கிற வகையில் அங்கு சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்டுத்தும் நோக்கத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப்போவதாகவும் அறிவித்தார். இது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த முடிவை எதிர்த்து மந்திரிகள் பலரும் பதவியை ராஜினாமா செய்தனர். அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு, அவர் ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடங்கி உள்ளதாக குற்றம் சாட்டியது. அவர் தனது முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. அதிபரின் முடிவை எம்.பி.க்கள் நிராகரித்தனர். 

ஆனால் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்றம் அவசரமாகக்கூடி அவருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கை எடுத்தது. அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 101 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 6 வாக்குகள் கிடைத்தன. 10 பேர் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கைக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் அதிபர் பதவி இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிபர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்து வந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபர் பதவி ஏற்றார். 60 வயதான இவர் வக்கீல் ஆவார். அவர் 2026-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகிக்கப்போவதாக தெரிவித்தார். 

அப்போதுதான் முந்தைய அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பதவிக்காலம் முடிய இருந்தது. பதவி ஏற்ற பின்னர் அதிபர் டினா பேசும்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க அரசியல் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார். அப்போது அவர், "நான் கேட்பது ஒரு இடம். நாட்டை மீட்பதற்கான நேரம் தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். பெரு நாட்டின் போலீஸ் துறையும், ஆயுதப்படைகளும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், அரசியல் அமைப்பின் ஒழுங்கினை தாங்கள் மதிப்பதாக தெரிவித்துள்ளன. பெருநாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த திருப்பங்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

  • 220
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads