Category:
Created:
Updated:
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் பொருத்தமாக இருக்கும் என்றனர். கட்சியில் உதயநிதி வளர்ந்து விட்டார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு தேவையானவற்றை அவர் செய்துள்ளார். தொகுதி முழுவதையும் சுற்றி வந்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். அவரது சேவை இன்னும் ஏராளமான மக்களுக்கு தேவைப்படுகிறது. எனவே அமைச்சரானால் இன்னும் பலருக்கு அவரால் சேவை செய்ய முடியும என்ற வகையில் உதயநிதிக்கு சாதகமாக பேசினார்கள். கட்சி நிர்வாகிகளும் உதயநிதி விரைவில் அமைச்சராகி விடுவார். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு அவர் அமைச்சராவது உறுதி என்று பேசத் தொடங்கி விட்டனர்.