Category:
Created:
Updated:
அமெரிக்க மருத்துவமனையில் 31 வயது பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனை ஊழியர்கள் பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது இறந்தவரின் உடலை அறுத்து கொண்டிருந்தபோது திடீரென பாம்பு ஒன்று உயிருடன் வெளியே வந்தது. இதை பார்த்து பிரேத பரிசோதனை ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.
அதன் பிறகு வனத்துறை அதிகாரிகள் பாம்பை பிடித்த பிறகு மீண்டும் பிரேத பரிசோதனை பணி தொடங்கியது. ஒரு ஓடையில் அழுகிய நிலையில் அந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் அப்போது அந்த உடலுக்குள் பாம்பு புகுந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.