சினிமா செய்திகள்
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
Ads
 ·   ·  52 news
  • 1 members
  • 0 friends

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட நாள்களாக பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த சங்கிலித் திருடர்கள் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக 40இற்கும் மேற்பட்ட பிடியாணைகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 60இற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையிலும் பொலிஸாரால் சந்தேக நபர்களைக் கைது செய்ய முடியாதிருந்தது.இந்தநிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர்களை நேற்று கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்கள் பிரதீப், மேனன் மற்றும் கொன்ஸ்டாபிள்களான கவியரசன், புவனச்சந்திரன், சுயந்தன், சம்பத், அரஹம், அசாத், யோசப், பிரவீன், கரன், பெண் பொலிஸ் கொன்ஸ்டாபிள் வர்ணகுலசூரிய ஆகியோரைக் கொண்ட குழுவே சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் வயோதிபர்களை இலக்கு வைத்து கத்தி முனையில் அச்சுறுத்திச் சங்கிலி அறுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை. அதையடுத்து யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.விசாரணைகளின் அடிப்படையில் 42 மற்றும் 43 வயதான சந்தேக நபர்கள் இருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். நாவற்குழி மற்றும் அல்வாயைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.முதன்மை சந்கேக நபரான சின்னவன் என்பவர் மீது 15 திகதியிடப்படாத பிடியாணைகளும், 8 பிடியாணைகளும் மற்றைய சந்தேக நபரான ஜெயா என்பவர் மீது 5 திகதியிடப்படாத பிடியாணைகளும், பருத்தித்துறை நீதிமன்றில் 10 பிடியாணைகளும், மேல் நீதிமன்றில் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.சந்தேக நபர்களிடம் இருந்து கோப்பாய் பகுதியில் வழிப்பறிக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும், நெல்லியடியில் திருடப்பட்டு வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கோப்பாய், நெல்லியடி, கொடிகாமம் ஆகிய இடங்களில் வழிபறி செய்யப்பட்டது என்று நம்பப்படும் 3 சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன.அதேநேரம், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் நுட்பமான முறையில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி, வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், கடந்த 3 மாதங்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடந்த வழிப்பறிக் கொள்ளைகளுடன் இவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

  • 1523
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads