Ads
தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்
தக்காளி விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த நிலையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு குறைவாக தக்காளி விற்பனையாகி வருகிறது. இதையடுத்து போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படி ஆகாத தக்காளி விவசாயிகள் குப்பையில் கொட்டிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 14 கிலோ கொண்ட தக்காளி ஒரு பெட்டி 400 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 130 ரூபாய் மட்டுமே விற்பனையாகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் கூட வராத நிலையில் போக்குவரத்து செலவு கூட கட்டுபடி ஆகவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தக்காளியை அறுவடை செய்து அதை கீழே கொட்டி அவர்கள் கண்ணீருடன் இது குறித்து பேட்டி அளித்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads