453 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு
புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பானது அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.இன்று வைரஸ் காய்ச்சல் பாதிப்பு சற்று குறைந்திருந்தது. நேற்று 470 குழந்தைகள் காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 453 ஆக குறைந்துள்ளது. அதில் 19 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது 74 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 816 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 26 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் 17 பேரும், காரைக்காலில் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகி, ஏனாம் பகுதியில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இன்று 27 பேர் குணமடைந்தனர். தற்போது மருத்துவமனைகளில் 2 பேர், வீடுகளில் 133 பேர் என 135 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 8 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 190 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 268 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 22 லட்சத்து 54 ஆயிரத்து 798 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.