சினிமா செய்திகள்
பிரமிக்க வைத்த  நடிகர் வேல ராமமூர்த்தி பேத்த திருமணம்
எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகர் வேல ராமமூர்த்தி. இவரின் பேத்தி திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் தங்கத்தால் ஆன மாலையை
ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த அமரன் திரைப்படத்தின் வசூல்
சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயக
ஒரு வாய்ப்பும் இல்லாமல், லட்சக்கணக்கில் வருமானம் வரும் 5 பிரபலங்கள்
1 )காமெடி நடிகர் செந்திலுக்கு கோடம்பாக்கத்தில் 48 போஷன் வசிக்கும் அபார்ட்மெண்ட்டை மூலம் வாடகை மட்டும் மாதம் லட்சக்கணக்கில் வருகிறது. 2 ) 80களில் முன்ன
நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார் தனுஷ்
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
Ads
 ·   ·  8072 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கூட்டமைப்பினுள் உள்ள சில கறுப்பாடுகளினால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது - செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தனிக்கட்சிகளுடைய எந்தவொரு நாட்டாமைத்தனத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நாம் காப்பாற்ற முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாவிட்டால் அது இல்லாமல் போகும்.


வெறும் உதட்டளவிலேயே தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. உளப்பூர்வமான விடுதலையை தொடர்பாக பேசவில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் அண்ணன் தம்பி என்று நாட்டாமைத்தனம் வேண்டாம். எங்கள் மக்கள் தற்போது இக்கட்டான சூழலில் இருக்கின்றார்கள்


அவன் பிழை இவன் பிழை என நாம் கூறுகின்றோம். மக்களின் கஷ்டங்களை போக்குகின்ற இனத்தை விடுதலை செய்கின்ற விடயங்களில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோமா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது ஆலோசனைகளை பெறுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ண வேண்டும். தற்போது வந்தவர்கள் தமிழரசு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்கின்ற செயலை செய்கின்றனர். இதனை ஒரு காலம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 22 இல் இருந்து தற்போது 10 ஆக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறி உள்ளது.ரணில் விக்ரமசிங்க பற்றி உங்களுக்கு தெரியும். விடுதலைப் புலிகளை உடைத்தவர். அவருடைய ராஜதந்திரத்தை பற்றி சொல்கின்ற போது நரித் தந்திரம் என்பார்கள். அந்த தந்திரமே விடுதலைப்புலிகளையும் பிரித்தாண்டது. அந்த தந்திரத்தையே நாங்கள் அண்மையில் பேசுகின்ற போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாண்டார். கூட்டமைப்பில் சிலர் தனக்கு வாக்களித்தார்கள் என கூறினர். சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் அதனை எதிர்த்து கதைத்தார்கள்.வெளியில் வந்த போது ரணில் இவ்வாறு கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ரணிலின் கருத்தை வலுப்படுத்துகின்ற வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற வகையிலும் ஒரு சிலரின் கருத்துக்கள் இருந்தது. அதனால் யாருக்கு வெற்றி என்று சொன்னால் அது ரணிலுக்கே வெற்றி. நாகரீகம் கருதி நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மாநாடு என்பதால் நான் பெயரைச் சொல்லி விரும்பவில்லை. இது யாருக்கு நட்டம்.ஜனாதிபதி சரியாக காயை நகர்த்தி இருக்கின்றார். அதனை நாங்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு எங்களுடைய மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றோம்.ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது. இருக்கின்றது. இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது. பலமாக 22 ஆசனங்களை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும். விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இணைந்து செயல்படுகின்ற சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

  • 482
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads