டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்புகள் உயர்வு
கடந்த 2020 ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், முதல் 2 அலைகள் முடிந்து, தற்போது 3 வது அலை நடந்து வருகிறது. விரைவில் கொரொனா 4 வது அலைக்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்தனர்.
சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தலை நகர் டெல்லியில் கொரானாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதத்தில் இல்லாத வகையில், தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,073 பேர் பாதிகப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கொரரொனாவல் பாதிக்கப்பட்டுவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 37 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து சுமார் 4,34, 24 029 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆகும். இதுவரை 5,26,530 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.