இத்தாலியில் மூன்று நாட்கள் முழு முடக்கம்
ஈஸ்டர் வார இறுதியில் இத்தாலி கடுமையான மூன்று நாட்கள் முடக்கத்தை அமுல்படுத்தியுள்ளது.
இதேவேளை, தேவாலயங்களைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தினத்தை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முழு முடக்கத்தினால் அனைத்து அத்தியாவசியப் பயணங்களும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ஈஸ்டர் தினத்தை மக்கள் வீடுகளில் கொண்டாடி வருகின்றனர்.
இத்தாலியில் 3.6 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் இத்தால் முதலிடத்தில் உள்ளது.
இதனைவிட, ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் ஈஸ்டர் வார காலத்தில் முடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.