சொன்னதை செய்து காட்டிய எடப்பாடியார் அரசு
தமிழகத்தில் வரும் 6ம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வரும் 4ம் தேதி இரவு 7 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே தமிழக அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வந்தார். அதில், தமிழக விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அனைவரிடமும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.
தமிழகத்தில் மொத்தம் 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு மின் வாரியம் இலவசமாக மின் விநியோகம் செய்து வருகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் விவசாயத்திற்கு இன்று முதல் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் விவசாய மின் மோட்டரை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். விவசாயத்திற்கு 24 மணி நேர மும்முனை மின்சார வழங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.