இலங்கையில் நாளை முதல் விசேட பாதுகாப்பு செயற்படுத்தப்படவுள்ளது.
இலங்கையில், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஏப்ரல் 1 முதல் 5 வரை செயற்படுத்தப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறைக் கருத்தில் கொண்டு இந்த விசேட பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு 2021 ஏப்ரல் 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதேவேளை, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குலின் இரண்டாம் ஆண்டும் நினைவுதினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் பிரதான பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்தவுள்ளதோடு, இராணுவம் தேவையான உதவிகளை வழங்கும் என பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கண்காணிப்பு, ரோந்து நடவடிக்கை மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும், தற்போது இராணுவம் பொலிஸாரின் பாதுகாப்புத் திட்டத்தை பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையைக் கருத்திற்கொண்டு இராணுவமும் பொலிஸாரும் கூட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயற்படுத்தவுள்ளதகாவும் பிரிகேடியர் பிரேமரத்ன கூறியுள்ளார்.
நாளை முதல் ஏப்ரல் 5 வரை பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ள போதிலும், பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.