Ads
புற்றுநோயை ஏற்படுத்தும் காய்ந்த மிளகாய் .!
அப்லரொக்ஸின் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தம் அடங்கும் 20,000 கிலோ கிராம் காய்ந்த மிளகாய் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு இந்த ஆலாசனையை வழங்கியுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட குறித்த காய்ந்த மிளகாய் மீதான இரண்டாவது பரிசோதனை நேற்று இடம்பெற்றது.
இதன்போதே அவற்றில் அப்லரொக்ஸின் பதார்த்தம் அடங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அந்த காய்ந்த மிளகாய் தொகை இந்தியாவிலிருந்து நாட்டின் வர்த்தகர் ஒருவரினால் கொண்டு வரப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.
Info
Ads
Latest News
Ads