
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் வீட்டுத் திட்டங்களை பெற்றுக்கொண்ட ஐயாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் தற்காலிக வீடுகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட 5147 வீடுகள் இதுவரை முழுமைப்படுத்த படாத நிலையில் அதன் பயனாளிகள் தொடர்ந்தும் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.2018மற்றும் 2019ம் ஆண்டுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு குறித்த வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு சுமார் 5147 வீடுகள் வழங்கப்பட்டு இன்றுவரை முழுமைப்படுத்த படாத நிலையில் முதலாம் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பகுதி கொடுப்பனவுகள் மட்டும் வழங்கப்பட்ட நிலையில் குறித்த வீட்டுத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.5147 வீடுகள் இவ்வாறு வழங்கப்பட்டு இன்றுவரை பூரணப்படுத்த படாத நிலையில் குறித்த வீட்டுத்திட்ட பயனாளிகள் தற்காலிக வீடுகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.