Ads
தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: - தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 765- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 19 ஆயிரத்து 515- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 879- பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், தொற்று பாதிப்புக்கு மேலும் 12- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 998 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 118- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 8,827 -ஆக குறைந்துள்ளது.
Info
Ads
Latest News
Ads