Category:
Created:
Updated:
சுவீடனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி டிசம்பர் 1ஆம் திகதி முதல் உள் அரங்கு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களைக் கட்டாயம் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தங்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ள மருத்துவம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அமைச்சர் லீனா ஹாலன்கிரேன் வலியுறுத்தியுள்ளார்.