Category:
Created:
Updated:
அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அவர் மன்னார்குடி அருகே உள்ள சுந்தரகோட்டையில் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது நேற்று காலை உறுதி செய்யப்பட்டது.
மன்னார்குடியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திவாகரன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.