Category:
Created:
Updated:
விஷ்வ கீர்த்தி என்ஸ்லி எட்வட் அமரசிங்கவினால் எழுதப்பட்ட "அசிரிமத் மாதாவக்" நூல் இன்று (22) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது.
திருமண வாழ்வில் இணைய எதிர் பார்த்திருக்கும் மகள்கள் மற்றும் தாய்மையடையும் கனவுடன் இருக்கும் மகள்களுக்கும் ஒரு தர்மத்துடனான தார்மீக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான பல குறிப்புகள் இப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வன்முறையில் இருந்து விடுபட்ட ஆரோக்கியமான குழந்தைகளை சமூகத்திற்கு அர்ப்பணிக்கும் நோக்கத்துடன், 2012 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் அரசு மற்றும் அரை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு உபதேசங்களை நிகழ்த்தி வரும் என்ஸ்லி எட்வட் அமரசிங்க அரச சேவைக்காக தன்னை அர்ப்பணித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார்.