இரணைதீவு மக்கள் பொதுப் படகுப் போக்குவரத்து இன்மையால் தங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் இரணைதீவு பகுதிக்கான பொதுப் படகுப் போக்குவரத்து இன்மையால் தங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இரணைதீவிலிருந்து முழங்காவில் இரணைமாதா நகருக்கு வருவதற்கோ அல்லது இரணைமாதா நகரில் இருந்து இரணைதீவிற்கு செல்வதற்கான பொதுப் படகுப் போக்கு வரத்துக்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் நாங்கள் தொடர்ந்தும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைதீவு பகுதியில் தற்போது நிரந்தரமாகவும் தொழில் நிமித்தமும் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேறி வாழ்ந்து வருகின்றன.சுமார் 22 வருடங்களுக்குப் பின்னர் மீள் குடியேறியிருக்கும் தமக்கு இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படவில்லை குறிப்பாக மருத்துவ வசதி மற்றும் சுகாதார வசதிகள் குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்இதேவேளை தமக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்வதாக முழங்காவில் பிரதேசத்திற்கு வரவேண்டியிருப்ப தாகவும் தெரிவித்துள்ள இவர்கள் தங்களுடைய கடல் போக்குவரத்தில் பொதுவான போக்குவரத்து படகு இன்மையால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர்.அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வது அல்லது பிரதேசத்திலிருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கும் பொதுப் போக்குவரத்துக்கு இமையால் தங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.குறிப்பாக மீன்பிடிப் படகுகளில் தாங்கள் பயணிக்க வேண்டும் அவ்வாறு பயணிக்கும்போது அந்த மீன்பிடி படகுகளுக்கு எரிபொருட்களை வழங்கியே தாங்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இந்த மக்கள் தெரிவித்துள்ளனனர்.எனவே தமக்கு தனியாக ஒரு பொதுப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் ஒரு பொதுப் போக்குவரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என இரணைதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.