Category:
Created:
Updated:
தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு இருந்த வேளையில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து 10.06.2021 அன்றைய தினம் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அவர்களிடம் இருந்து 60 லிட்டர் சட்டவிரோத மதுபான காசிபிணையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து விசாரணைகள் நடைபெற்று பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.