கொவிற் தொற்றுக் காரணமாக மூடப்பட்ட குறித்த ஆடை தொழிற்சாலையினை திறப்பதற்கான அனுமதியினை வழங்கியுள்ள பதுக்குடியிருப்பு.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திறப்பதற்கான அனுமதி புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வழங்கப்பட்டுள்ளது.கொவிற் தொற்றுக் காரணமாக மூடப்பட்ட குறித்த ஆடை தொழிற்சாலையினை திறப்பதற்கான அனுமதியினை வழங்கியுள்ள பதுக்குடியிருப்பு.சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையானது தொற்றிலிருந்து இருந்து குணமடைந்த அல்லது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட அல்லது பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களை கொண்டு தொழிற்சாலையை மீள இயக்குமாறும் தொழிற்சாலை உள் நுழையும் போதும் வெளிச் செல்லும் போதும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் தனிநபர் சுகாதாரம் பேணுதல் போன்ற செயற்பாடுகளை உறுதிப்படுத்துமாறு சகல ஊழியர்களுக்கும் covid-19 தடுப்பூசி வழங்குவதை உறுதிப்படுத்துமாறும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.