கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தகவல்
சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் எதிர்வரும் வேலைத்திட்டம் மற்றும் தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கருப்புப் பட்டியல் முறை அமுல்படுத்தப்படும் என்றும் வலியுறுத்தினார்.
இதன் மூலம், நெடுஞ்சாலைகளில் இடம்பெறுகின்ற வீதி ஒழுங்கு விதிகளை மீறுவதற்கு எதிராக பொலிஸாரினால் தண்டப்பத்திரம் வழங்கப்படும் அனைத்து சாரதிகளுக்கும் அவர்களது தவறுகளுக்கமைய கருப்புப் பட்டியலில் இடுவதற்கான புள்ளிகள் சேர்க்கப்படும் என்றும் அவர் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000