யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வழக்கு செயல்களில் சாதகமான சூழல் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சிறு தூர பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மிதுனம்
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
தோற்றப் பொழிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். குண நலன்களின் சில மாற்றங்கள் காணப்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய நினைவுகளால் ஒரு விதமான குழப்பம் உண்டாகும். தடங்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
எதிர்பாராத சில வரவுகள் உண்டாக்கும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். முத்த சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். சுப காரிய செலவுகள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
கன்னி
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் பிறக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் உண்டாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படவும். குழந்தைகளின் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். நினைத்த பணிகளை முடிப்பீர்கள். உடன் இருப்பவர்களின் சுய ரூபங்கள் வெளிப்படும். சகோதர வகையில் காரிய அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். இறை சார்ந்த பிரார்த்தனைகள் கைகூடும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளவும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். பங்குதாரர்களால் சில விரயம் ஏற்படக்கூடும். மனதளவில் சில மாற்றம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
தாய் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வங்கி சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
கும்பம்
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வீடு பழுது பணிகளை மேற்கொள்வீர்கள். தாயாரின் ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக தடைகளை முறியடிப்பீர்கள். சக ஊழியர்கள் வழியில் ஆதரவு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
மனதில் உள்ள சஞ்சலத்தால் குழப்பம் ஏற்படும். வியாபாரத்திற்கான முதலீடுகளை ஏற்படுத்துவதில் தாமதம் உண்டாகும். நெருங்கிய உறவுகளிடம் அனுசரித்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 21 ஆம் தேதி திங்கட்கிழமை 5.1.2026
இன்று மாலை 05.02 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.
இன்று அதிகாலை 03.59 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.
இன்று அதிகாலை 02.08 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.24 வரை கரசை. பின்பு வனிசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 07.30 முதல் 08.30 மணி வரை
ஈரான் அரசுக்கு எதிர்ப்பை வெளியிட்டு கனடாவின் வன்கூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஈரான்–கனடியர்கள் சேர்ந்த இரண்டு வெவ்வேறு குழுக்கள் வன்கூவரில் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
1979 முதல் ஈரானை ஆட்சி செய்து வரும் இஸ்லாமிய குடியரசு ஆட்சியால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் நிலையை வெளிச்சம் போடுவதே இவர்களின் நோக்கமாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
இப்போது நடைபெறும் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக, ஈரானை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நெருக்கடி குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரான் நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
முன்னதாக நடைபெற்ற ஈரான் போராட்டங்கள் வன்முறையால் ஒடுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் 86 வயதான உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெயி, “கலவரக்காரர்கள் தக்க இடத்தில் நிறுத்தப்பட வேண்டும்” என்று சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் போராட்டக்காரர்களுக்கு கனடா அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஒரு மகான் ஒரு ஏழைக்கு காட்டிய வழி!
ஒரு ஊரில் ஆகக் கடைசியான வறுமைக்கோட்டில் குடும்பம் ஒன்று இருந்தது.
வாழ்ந்து கெட்ட குடும்பம். தலைவன், தலைவி, மகன், மகள் என நான்கு பேர் இருந்தனர்.
சோம்பேறிகள் இல்லை என்றாலும் அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. கால் வயிற்றைக்கூட தண்ணீரில்தான் கழுவிக் கொண்டனர். கண்ணீர் வடிக்கக் கூட தெம்பற்ற நிலை.
இவர்களின் நிலையைப் பார்த்து பரிதாப்பட்ட ஒருவர், அந்த ஊரின் மலையடிவாரத்தில் காலம் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாமியாரைப் போய் பாருங்கள். ஏதாவது வழி சொல்வார் என்றார்.
சரியென்று அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்பி சாமியை பார்க்க சென்றார். ஒரு ஓலைக் குடிசையில் சாமி சப்பணமிட்டு அமர்ந்து ஏதோ தியானம் செய்து கொண்டிருந்தார். தியானத்தை முடிக்கும் வரை காத்திருந்த அவர், "சாமி நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்!" என்றார்.
"சொல் மகனே! என்ன பிரச்சினை உனக்கு ? "
"சாமி! எங்க குடும்பத்துல என்னையும் சேர்த்து நாலு பேர் இருக்கோம். வசதியா வாழ்ந்து நொடிச்சுப் போனதால இந்த ஊருல எங்கள்ல யாருக்குமே வேலை கிடைக்கல.
நல்லா சாப்பிட்டு பல மாசம் ஆகிப் போச்சு. உங்களை சந்திச்சா ஏதாவது நல்ல வழி சொல்வீங்கனு ஒருத்தர் சொன்னார். அதான் வந்தேன் சாமி " என்றார் பவ்யமாக.
"உனக்கு உழைத்து சாப்பிட ஆசையா, முன்பு போல் உட்கார்ந்து சாப்பிட ஆசையா? "
"உட்கார்ந்து சாப்பிட்டு கெட்டது போதும். இனி உழைத்து சாப்பிடத்தான் ஆசை சாமி "
"சரி அதோ அந்த மூலையில் ஒரு மூடை அரிசியும் அந்த அரிசி தீரும் வரைக்குமான மளிகைப் பொருட்களும் இருக்கின்றன. எடுத்துக் கொள் "
"சாமி நான் உட்கார்ந்து சாப்பிட விரும்பவில்லை. இது தீர்ந்த பின் மீண்டும் இதே நிலைக்குதான் வருவேன். நிரந்தர தீர்வு தாருங்கள் சாமி "
"அவசரப்படாதே மகனே. நான் சொல்வதை மட்டும் செய். ஆனால் ஒரு நிபந்தனை. இன்று கால் படி அரிசியை சமை. நாளை அதை இரட்டிப்பாக்கி அரைப் படி சமை.
நாளை மறுநாள் அதையும் இரட்டிப்பாக்கி ஒரு படி அரிசி சமை. இப்படியே ஒவ்வொரு நாளும் முதல் நாளை விட இரட்டிப்பாக சமை. ஒரு அரிசி கூட வீணாக கூடாது.
என்னைக் கேட்காமல் உன் வீட்டார் தவிர யாருக்கும் சாப்பாடு போடக் கூடாது"
"சாமி இதெப்படி நிரந்தர தீர்வாகும்? "
"நான் சொல்வதை மட்டும் செய்வதென்றால் இவற்றை எடுத்துப் போ. இல்லையென்றால் நீ இப்படியே போகலாம் "
"நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன்.
கோவப்படாதீங்க சாமி"
சாமி சிரித்துக் கொள்ள, அரிசியையும் மளிகைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
அன்று கால் படி அரிசி சமைத்து கொஞ்சமாய் குழம்பு வைத்து நான்கு பேரும் சாப்பிட்டார்கள். அனைவருக்கும் அரை வயிறு நிரம்பியது.
அடுத்த நாள் அரைப்படி சமைத்து குழம்பு வைத்து வயிறாற சாப்பிட்டார்கள். மூன்றாம் நாள் ஒரு படி சமைத்து சாப்பிட்டது போக பாதி சாதம் மிஞ்சியது.
வீணாக்க கூடாதே என்ன செய்வது என யோசித்தவர், அடுத்த அரை மணி நேரத்தில் சாமியிடம் ஓடினார்.
"சாமி நீங்கள் சொன்னது போல ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாக சமைத்தேன். ஆனால் இன்று பாதி மிஞ்சி விட்டது.
என்னைக் கேட்காமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றீர்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும். எங்களுக்கு அரைப்படியே போதுமானது. அதை மட்டும் தினமும் சமைத்துக் கொள்ளவா? "
"அரிசி தீரும் வரை இரட்டிப்பாக சமைப்பதை நிறுத்தக் கூடாது என்பது நிபந்தனை.
மிஞ்சியதை அக்கம் பக்கத்தினருக்கு கொடு"
"சரிங்க சாமி " கும்பிட்டு விட்டு கிளம்பினார். வீட்டிற்கு சென்றதும் மிஞ்சிய சாதத்தை அக்கம் பக்கத்தினர் நான்கு பேருக்கு கொடுத்தார்.
அவர்கள் சாப்பிட்டு விட்டு "ஆகா அருமையான சாப்பாடு" என புகழ்ந்தார்கள்.
மறுநாள் இரண்டு படி அரிசியைப் பொங்கி சாப்பிட்டது போக பதினைந்து பேர் அளவு சாப்பாடு மிஞ்சியது.
இப்படியே போனால் அரிசி ஒருவாரத்தில் முடிந்து விடுமே என்ற கவலையில் மீண்டும் சாமியைப் பார்க்க ஓடினார்.
"சாமி இன்னைக்கு பதினைந்து ஆள் சாப்பாடு மிஞ்சி விட்டது. இப்படி சமைத்தால் ஒருவாரம் கூட அரிசி வராதே "
"நீ சுவையாக சமைக்கிறாயா? "
"ஆமாம் சாமி. நேற்று சாப்பிட்ட அனைவரும் எந்த ஓட்டல்லயும் இவ்வளவு ருசியான சாப்பாடு கிடைப்பதில்லைனு பேசிக்கிறாங்க "
"அப்படியானால் மீதமாகும் சாப்பாட்டை நீ விற்பனை செய்"
"சரிங்க சாமி " என்று சந்தோசமாய் வணங்கி வீட்டுக்கு வந்தவர் சாப்பாடு நாற்பது ரூபாயென விற்க ஆரம்பித்தார். பத்து சாப்பாடு மட்டுமே விற்றது.
அஞ்சு சாப்பாடு மிஞ்சியது.
அடடா இன்னைக்கு பதினைஞ்சு சாப்பாடே விக்கல. நாளைக்கு எப்படி நாப்பது சாப்பாட்டை விக்கிறது என்ற கவலை வர அடுத்த அரைமணி நேரத்தில் சாமியின் முன் நின்றார்.
"சாமி பத்து சாப்பாடுதான் வித்துச்சு. இன்னைக்கே அஞ்சு மிஞ்சிருச்சு. நாளைக்கு நாலு படி பொங்குனா வீணாப் போகுமே சாமி "
"ஒரு சாப்பாடு எவ்வளவுனு வித்தே? "
"நாப்பது ரூபாய்க்கு வித்தேன் சாமி "
"ஒரு சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவாகும்? "
"ஒரு சாதத்துக்கு அஞ்சு ரூபா வச்சா குழம்பு மற்றும் தொட்டுக் கொள்ளும் வகையறாக்களுக்கு பத்து ரூபாயாகும். மொத்தம் ஒரு சாப்பாட்டுக்கு பதினைந்து ரூபாய் செலவாகும் சாமி "
"உன் உழைப்புக்கு அஞ்சு ரூபாய் சேர்த்து வச்சாலும் ஒரு சாப்பாடு தயாரிக்க ஆகும் செலவு இருபது ரூபாயை தாண்டாது. நீ அதையும் இரு மடங்காங்கி விற்றால் எப்படி விற்பனையாகும்? "
"அப்படி விற்றால்தானே நாளை ஏதோ ஒரு வகையில் நஷ்டம் வரும் போது சமாளிக்க முடியும் "
"இதுதான் நிறையப் பேர் செய்யும் தவறு. குறைந்த லாபம் அதிக விற்பனை என்பதே புத்திசாலிகள் கடைபிடிக்கும் அழகான வியாபார முறை.
நாம் செய்யும் தொழிலில் அனைவருக்கும் பயன் இருக்க வேண்டும். நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமென நினைப்பவன் நல்ல வியாபாரி ஆக முடியாது "
"இப்போது நான் எவ்வளவு விலை வைக்க வேண்டும் சாமி "
"உன் குடிசையின் முன்னால், 'வீட்டுமுறை சாப்பாடு ரூபாய் இருபது மட்டும்' என்று ஒரு அட்டையில் எழுதி தொங்கவிடு "
"சரிங்க சாமி " என்று அரை மனதுடனே நகன்றார் அவர்.
அடுத்த நாளிலிருந்து இருபது ரூபாய்க்கு சாப்பாடு விற்பனை செய்ய சக்கை போடு போடத் தொடங்கியது.
வியாபாரம்.
நான்கே நாட்களில் அரிசி மூடை காலியாக, அதுவரை சேர்ந்த பணத்தை எடுத்துக் கொண்டு சாமியிடம் சென்றார். அவர் முகத்தில் பார்த்த சந்தோசத்தை கண்டு சாமி கேட்டார்.
"என்ன மகனே மகிழ்ச்சியாய் இருக்கிறாயா? "
"தங்கள் ஆசியாலும் ஆலோசனையாலும் மிக நலமாக இருக்கிறேன் சாமி. இந்தாங்க ... இதுவரை சாப்பாடு விற்ற பணம். இது உங்களைச் சேர வேண்டியது சாமி"
"அதை நீயே வைத்துக் கொள். அதில் மூன்று மூடை அரிசியும் மூன்று பை மளிகைப் பொருட்களும் வாங்கி, ஒரு மூடையை நீ வைத்துக் கொள் . நான் கொடுத்த மூடைக்கு இரட்டிப்பு கணக்கில் இரண்டு மூடைகளை எனக்குக் கொடுத்து விடு. இனி நீ உன் வியாபாரத்திலிருந்து எனக்கு எதுவும் தர வேண்டியதில்லை"
"உங்களுக்கு எதற்கு சாமி இரண்டு மூடை அரிசியும் மளிகையும் "
"உன்னைப் போல் இன்னும் பல தங்க மகன்களை உருவாக்கும் பணி இருக்கிறது மகனே! "
"மகானே!" என்று அவரின் கால்களில் விழுந்தார் அவர் !
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வாசனை திரவிய வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக இடையூறுகள் ஏற்படும். சில அனுபவம் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
வியாபார பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். தோற்றப்பொழிவில் மாற்றம் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம்
எதிலும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படவும். மற்றவர்கள் மூலம் நெருக்கடியான சூழல்கள் உண்டாகும். புதிய நபர்களை நம்பி செயல்படுவது தவிர்க்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். மனதளவில் இறுக்கமான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடுதலாகும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சிம்மம்
தந்தை வழி உறவுகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொலைதூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் மேம்படும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கன்னி
வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். உறவினர்கள் வழியில் புரிதல்கள் ஏற்படும். ஆன்மீக தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உருவாகும். இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். உயர்கல்வி தொடர்பான தேடல்கள் அதிகரிக்கும். வர்த்தக துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழநிலைகள் உண்டாகும். கற்பிக்கும் செயல்பாடுகளில் சில புதுமைகள் காணப்படும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விருச்சிகம்
திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவுகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
சொத்து பிரச்சனைகள் சமூகமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கலைத்துறையில் சாதகமான சூழல்கள் ஏற்படும். தாய் மாமன் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். கடனை அடைப்பதற்கான வழிகள் கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகரம்
வெளியூர் பயணங்கள் நன்மை தரும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். கலைத்துறையில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். நிர்வாக துறைகளில் உயர்வு ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தடங்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். செயல்களில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஒத்துழைப்புகள் சாதகமாகும். உயர் அதிகாரிகள் வழியில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். திடீர் பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். மனதளவில் திருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4.1.2026.
இன்று பிற்பகல் 02.53 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று மாலை 05.49 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.
இன்று காலை 07.31 வரை ஐந்தரம். பின்னர் வைதிருதி.
இன்று அதிகாலை 03.47 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 02.53 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.00 முதல் 07.00 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
பனிப்புயலையும் பொருட்படுத்தாமல், பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்ணுக்கு இந்திய சாரதி ஒருவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கடந்த சனிக்கிழமை இரவு, கனடாவின் கால்கரியில் கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருக்கும் நேரத்தில், டாக்ஸி சாரதியும் இந்திய வம்சாவளியினருமான ஹர்தீப் சிங் தூருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
பிரசவ வலியில் துடித்த பெண்ணொருவரை சிங்குடைய டாக்ஸியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வரமுடியுமா என அந்தப் பெண்ணின் கணவர் கேட்க, கடும் பனிப்புயல் வீசிக்கொண்டிருந்த நிலைமையிலும் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சம்மதித்துள்ளார் சிங். ஆனால், மருத்துவமனையை அடையும் முன்பே, காரின் பின் சீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார் அந்தப் பெண்.
விரைவாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்ததால் அந்தப் பெண்ணின் கணவர் மிகவும் நெகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கும் சிங், பின்னர், தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தன்னை அழைத்து தகவல் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனது காரில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது இதுவே முதல் முறை என கூறும் சிங், அது தனது வாழ்வில் மறக்க இயலாத தருணம் என நெகிழ்கிறார். இந்நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தூதரான அஜித் சிங் உட்பட, பலரும், அந்த பெண்ணுக்கு உதவிய டெக்ஸியின் சாரதியான சிங்குக்கு புகழாரம் சூட்டிவருகிறார்கள்.
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 3.1.2026.
இன்று மாலை 04.42 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று மாலை 06.56 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.
இன்று காலை 10.18 வரை பிராமியம். பின்னர் ஐந்தரம்.
இன்று அதிகாலை 05.42 வரை பத்தரை. பின்னர் மாலை 06.43 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 12.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
லெபனானன் (Lebanon) நாட்டில், பெரும் பணக்காரர்களில் ஒருவர் Emile Bustani.
Beirut நகரில், தமக்காகவே அழகழகாக ஒரு கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார்.
சொந்தமாக ஒரு ஜெட் விமானம். அதில் அவர் தனியாகவே பயணம் செய்வார்.
ஒருநாள் அந்த விமானம் கடலில் விழுந்தது. அவரது உடலைத் தேட மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவிடப்பட்டன.
ஆனால்… விமானம் மட்டும் கிடைத்தது. உடல் கிடைக்கவே இல்லை.
அவர் கட்டி வைத்த அந்த கல்லறையில் அடக்கம் செய்ய கூட உடல் இல்லை.
⸻
இன்னொரு சம்பவம்…
பிரிட்டனைச் சேர்ந்த பெரும் பணக்கார யூதர் Rothschild. அளவற்ற செல்வம். சில நேரங்களில் பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு.
ரொக்கமாக இருந்த செல்வத்தை பாதுகாப்பாக வைக்க அதிநவீன பாதுகாப்புடன் ஒரு தனி அறை.
ஒருநாள் அறைக்குள் நுழைந்தவர், அறியாமலே கதவை அடைத்துவிட்டார்.
அவ்வளவுதான்… கதவு திறக்கவே இல்லை. சத்தம் போட்டார். கத்தினார்.
யாருக்கும் கேட்கவில்லை.
ஏன் என்றால், அது வீடு அல்ல… அரண்மனை.
பல நாட்கள் அங்கிருந்து உல்லாசப் பயணம் சென்று விடுவார். அன்றும் அப்படித்தான் சென்றிருப்பார் என்று குடும்பத்தினர் நினைத்தனர்.
பசியாலும் தாகத்தாலும், பணக்கட்டுகளின் மேல் கிடந்தபடியே உயிர் பிரிந்தார்.
மரணத்திற்கு முன், விரலை காயப்படுத்தி சுவரில் எழுதினார்:
“உலகிலேயே பெரும் பணக்காரன் பசியாலும் தாகத்தாலும் இறக்கிறான்.”
சில வாரங்கள் கழித்தே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
⸻
ஒரு உண்மைச் செய்தி…
“பணம் இருந்தால் எல்லாம் கட்டுப்பாட்டில்” என்று நினைப்பவர்களுக்கு—
ஒருநாள் இந்த உலகை பிரிந்தே ஆக வேண்டும். ஆனால்… எங்கே?
எப்போது? எப்படி?
இதை யாராலும் கணிக்க முடியாது. உல்லாசப் பயணத்திற்கு போனால் திரும்பி வரலாம்.
ஆனால்… உலகை பிரிந்தால் திரும்ப வர முடியுமா?
⸻
ஆகவே…
• யாரையும் வெறுக்காமல் • யாரையும் ஒடுக்காமல் • யாரையும் காயப்படுத்தாமல் • யாரையும் கேவலப்படுத்தாமல் “நாங்கள் மட்டுமே வசதியாக வாழ வேண்டும்” என்ற அகந்தையை விடுவோம்.
வருமானம் அதிகரிக்கலாம். 10 வீடுகள் வாங்கலாம். ஆனால் தூங்க 6 அடி கட்டில் போதும்.
அறுசுவை உணவு ஒவ்வொரு வேளையும் உண்ணலாம். ஆனால் மறுநாள் அதுவே மலமாகி விடும்.
⸻
உண்மையான மகிழ்ச்சி எதில்? பிறருக்கு அளிப்பதில். நல்ல நண்பர்களுடன் ஒரு கப் தேநீர் அருந்தும் போது கிடைக்கும் ஆனந்தம்—
நாமே தனியாக ஸ்டார் ஹோட்டலில் வசதியாக சாப்பிடும்போது கிடைக்காது.
⸻
கடைசி வார்த்தை…
• சுயநலத்துடன் வாழாதீர்கள் • அகந்தையில் தலைக்கனம் கொள்ளாதீர்கள்
*மனிதமாக வளருங்கள்…
அன்பை விதையுங்கள்.


































