அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது.
இந்த தாக்குதல்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 2-ம் தேதி முதல் துபாய் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவை போதுமானதாக இல்லை.
இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் துபாயில் சிக்கியுள்ளனர். அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப ஏதுவாக எமிரேட்ஸ் நிறுவனம் சார்பில் மார்ச் 5, 6-ம் தேதிகளில் 100 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.
ஈரான் ராணுவ தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் சிறப்பு விமானங்களில் துபாய்க்கு கொண்டு வரப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
