- · 0 friends
ஒரு பெண் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
மன்னன் ஒருவன் பக்கத்து நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான். தோற்ற மன்னன் ஜெயித்த மன்னனிடம் தன் தோல்வியை ஒப்பு கொள்ள! ஜெயித்த மன்னன் அவனுக்கு நாட்டை திருப்பி தர முன் வந்தான்!
ஆனால் அவனுக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் ஒரு கேள்வியை ஜெயித்த மன்னனிடம் கேட்டு இருந்தாள். அதற்கான சரியான விடையை அவன் சொன்னான் என்றால் உடனே திருமணம் என்று சொல்லி இருந்தாள்.
அந்த கேள்வி!
ஒரு பெண் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
ஜெயித்த மன்னனும் அவனிடம் இந்த கேள்விக்கு பதில் கண்டு பிடித்து சொல். உனக்கு நாட்டை திருப்பி தருகிறேன் எனக்கும் என் காதலியுடன் திருமணம் நடக்கும் என்று சொல்ல!
தோற்ற மன்னன் அந்த கேள்விக்கான விடையை தேடி அலைந்தான். கடைசியில் ஒரு சூனியக்காரி கிட்ட போனால் விடை கிடைக்கும் என்று சொல்ல அவளை சென்று பார்த்தான். அவளிடம் விடயத்தை சொல்ல அவளோ உனக்கு நாடு கிடைக்கும் எனக்கு என்ன கிடைக்கும் என்று அவள் சொல்ல! அதற்கு அவன் நீ என்ன கேட்டாலும் தருகிறேன் என்று சத்தியம் செய்தான்.
சூனியக் காரியும் விடையை சொன்னாள்.
" தன் சம்பந்த பட்ட முடிவுகளை தானே எடுக்க வேண்டும் என்று நினைப்பது தான் எந்த ஒரு பெண்ணும் தன் ஆழ் மனதில் நினைப்பாள் என்று சொல்ல!
அந்த விடையை ஜெயித்த மன்னனிடம் சொல்ல அவன் தன் காதலியிடம் சொல்ல உடனே அவர்களுக்கு திருமணம் ஆனது. இவனுக்கும் தோற்ற நாடு திரும்பி கிடைத்தது.
இப்பொழுது சூனியக் காரி கிழவியை போய் பார்த்து அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்க! அவள் தன்னை திருமணம் செய்து கொள்ளனும் என்றாள்.
மன்னனும் சரி என்று கொடுத்த வாக்கை காப்பாற்றினான். உடனே அவள் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள்.
மன்னன் ஆச்சரியம் அடைந்தான். அவள் சொன்னாள் மன்னா! நான் வீட்டில் கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே செல்லும்போது அழகிய பெண்ணாக மாறி விடுவேன்! அதே வீட்டில் அழகிய பெண்ணாக உன்னுடன் இருந்தால் வெளியே வரும்போது கிழவியாக மாறி விடுவேன்! இதில் எது வேண்டும் என்று நீ தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னாள்.
பக்குவம் அடைந்து இருந்த மன்னன் அவளிடம் இது உன் சம்பந்த பட்ட விடயம் உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய் என்று சொல்ல!
அவளோ மன்னா ஒரு பெண் தன் கணவனுடன் இருக்கும் எல்லா நேரங்களிலும் அழகாய் இருக்க தான் நினைப்பாள். அதனால் நான் எப்பொழுதும் அழகியன் இளம் பெண்ணாக இருப்பேன்!
நீ ஜெயித்து விட்டாய் என்று சொன்னாள்.