Feed Item
·
Added article

அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜனநாயகன் திரைப்படம், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்க பிறகு திரைக்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். விஜயுடன் பூஜே ஹெக்டே, மமிதா மைஜூ நாயகிகளாக நடித்துள்ளனர். ஹெச். வினோத் இயக்கியுள்ளார் இப்படத்தை. கடந்த பொங்கல் அன்றே வெளியாக இருந்தது இப்படம். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாவதில் தாமதம் ஆனது. பட தயாரிப்பு நிறுவனமும், சென்சர் போர்டும் நீதிமன்றத்தில் முறையிட்டன. ஆனாலும் முடிவு எட்டாமல் இருந்தது. ஒருவழியாக தயாரிப்பு நிறுவனம் வழக்குகளை வாபஸ் பெற்றது. இதையடுத்து படம் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பபட்டது. இதனால் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் ஜன நாயகன் தேர்தலுக்கு பின்பே வெளியாகும் என கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்த பிறகு படத்திற்கான சென்சார் சான்றிதழ் மார்ச் 17ஆம் தேதிக்கு முன்பு கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் வர இருப்பதால் தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஜனநாயகன் திரைப்படத்தை திரையிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

  • 134